எம்மில் சிலருக்கு திடீரென்று அடிவயிற்று பகுதியில் பிடிப்பு ஏற்பட்டு வலி உண்டாகும். மேலும் பெண்களில் சிலருக்கு மாதவிடாய் தருணங்களில் இயல்பானதை விட கூடுதலான வலியுடன் அடிவயிற்றில் தசை பிடிப்பு பாதிப்பு ஏற்படும். இதற்கு உடனடியாக வைத்தியர்களை சந்தித்து உரிய ஆலோசனையும், சிகிச்சையும் பெற வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். ஏனெனில் வயிற்றுப் பிடிப்பு என்பது புற்றுநோயின் அறிகுறியாகவும் இருக்கலாம் என வைத்தியர்கள் எச்சரிக்கிறார்கள்.
எம்முடைய மார்பு பகுதிக்கு கீழும், இடுப்பு பகுதிக்கு மேலும் உள்ள வயிற்றின் எந்த ஒரு பகுதியிலும் ஏற்படக்கூடிய வலி மற்றும் பிடிப்பு, அடி வயிற்று பிடிப்பு அல்லது அடி வயிற்று தசை பிடிப்பு பாதிப்பு என வைத்தியர்கள் குறிப்பிடுகிறார்கள். எம்மில் பலரும் தங்களுடைய வாழ்நாளில் இத்தகைய பாதிப்பிற்கு முகம் கொடுத்திருப்பார்கள். ஆனால் எதன் காரணத்தைக் கொண்டு இத்தகைய வயிற்று பிடிப்பு பாதிப்பு ஏற்பட்டதை என்பதை பொறுத்து சிகிச்சையையும் பெற்றிருப்பார்கள்.
வலியுடன் சிறுநீர் கழித்தல், சிறுநீரில் குருதி அல்லது மலத்தில் குருதி, நீர்ச்சத்து குறைபாடு, பசியின்மை, திடீரென உடல் எடை குறைவு போன்றவை இத்தகைய பாதிப்பின் அறிகுறி ஆகும்.
அஜீரணம், மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு, வாய்வு தொல்லை, நெஞ்செரிச்சல், வாந்தி, காய்ச்சல், வைரஸ் தொற்று.. என பல்வேறு காரணங்களால் இத்தகைய பாதிப்பு ஏற்படக்கூடும். மேலும் வயிறு, கல்லீரல், சிறுநீரகம், கணையம் என ஏதேனும் ஒரு உறுப்பில் ஏற்படும் பாதிப்பின் காரணமாகவும் வயிற்றுப் பிடிப்பு பாதிப்பு அல்லது அடிவயிற்று தசை பிடிப்பு பாதிப்பு ஏற்படக்கூடும். சிலருக்கு வயிற்றுப் பகுதிகளில் உள்ள உறுப்புகளில் புற்றுநோய் தொற்று பாதிப்பு ஏற்பட்டிருந்தாலும் இத்தகைய வலியுடன் கூடிய வயிற்றுப் பிடிப்பு பாதிப்பு ஏற்படக்கூடும். மேலும் சிலருக்கு உணவு விடமாதல், இரைப்பை குடல் அழற்சி, மாதவிடாய் தருணங்களில் ஏற்படும் கூடுதல் வலி, பித்த நீர் கட்டி, வயிற்றுப் புண்கள், பெருங்குடல் புற்றுநோய் ஆகியவற்றின் காரணமாகவும் இத்தகைய வயிற்றுப் பிடிப்பு பாதிப்பு ஏற்படக்கூடும்.
ரத்த பரிசோதனை, சிறுநீர் பரிசோதனை, மலக்குடல் பரிசோதனை, சிறுநீரக கல் மற்றும் பித்தப்பை கற்கள் தொடர்பான பிரத்யேக பரிசோதனை, எண்டோஸ்கோப்பி, கொலனோஸ்கோப்பி, அல்ட்ரா சவுண்ட், சிடி ஸ்கேன் போன்ற பரிசோதனைகளை மேற்கொண்டு பாதிப்பின் தன்மையையும், வீரியத்தையும் துல்லியமாக அவதானிப்பர்.
இதற்கு நவீன மருத்துவ தொழில் நுட்பங்கள் மூலம் கண்டறியப்பட்டிருக்கும் பிரத்யேக மருந்தியல் சிகிச்சைகளை வழங்கி முதன்மையான நிவாரணத்தை வழங்குவர். இதனை தொடர்ந்து உறுப்புகளில் ஏற்பட்டிருக்கும் அடைப்புகளை நீக்க பிரத்யேக சத்திர சிகிச்சைகளை மேற்கொண்டு நிவாரணம் வழங்குவர். புற்றுநோய் என்று கண்டறியப்பட்டால் அதற்குரிய சத்திர சிகிச்சை+ கீமோதெரபி+ கதிர்வீச்சு தெரபி ஆகியவற்றை பிரத்யேகமாகவோ ஒருங்கிணைந்தோ வழங்கி நிவாரணம் தருவர்.