சென்னையில் ஹைடெக் விபச்சாரம்! பள்ளி சிறுமிகளை மூளைச் சலவை செய்வது எப்படி?
29 May,2024
சென்னையில் சிறுமிகளை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய வழக்கில் ஏற்கெனவே 8 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் மறைமலைநகரை சேர்ந்த விஜயலட்சுமி என்ற மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை வளசரவாக்கத்தில் உள்ள வீட்டில் விபச்சாரம் நடப்பதாக கிடைத்த ரகசிய தகவலை அடுத்து விபச்சார தடுப்பு பிரிவு போலீஸார் சோதனையிட சென்றனர். அப்போது அங்கு 17 வயது சிறுமியிடம் உல்லாசம் அனுபவிக்க 70 வயது முதியவர் இருந்ததை கண்டு போலீஸார் அதிர்ந்தனர்.
அந்த முதியவரிடம் விசாரணை நடத்தியதில் அவர் சென்னை மேற்கு சைதாப்பேட்டை பகுதியைச் சேர்ந்த ராமசந்திரன் என்பது தெரியவந்தது.
மேலும் விசாரணையில் சென்னை தியாகராய நகரை சேர்ந்த பிரபல விபச்சார புரோக்கர் நதியா(37) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இந்த நதியாதான் சிறுமியை விபச்சாரத்திற்கு அனுப்பி வைத்ததாகவும் அதற்காக ரூ 25 ஆயிரம் கொடுத்ததாகவும் தெரிவித்தார். இதையடுத்து நதியாவை விபச்சார தடுப்பு பிரிவு போலீஸார் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் கஞ்சா, கள்ளச்சந்தையில் மது விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளாராம். இதில் கிடைத்த பணத்தைவிட பாலியல் தொழிலில் அதிக பணம் கிடைத்ததால் அவரே இந்த தொழிலில் இறங்கியுள்ளார்.
ஏற்கெனவே ஒரு முறை விபச்சார தடுப்பு பிரிவு போலீஸாரிடம் சிக்கி அரசு காப்பகத்திலும் சிறிது காலம் அடைக்கப்பட்டிருந்தாராம். இதையடுத்து சென்னை ஆழ்வார்பேட்டை டிடிகே சாலையில் வசிக்கும் தனது சகோதரி சுமதி (40), அவருடைய கணவர் ராமசந்திரன் (43) (இருவரின் பெயர்களும் மாற்றப்பட்டுள்ளன). சகோதரி மற்றும் அவருடைய கணவருடன் இணைந்து பாலியல் தொழிலை நடத்தியுள்ளார்.
நேபாளை சேர்ந்த மாயா ஒலி என்ற பெண் இவர்களுக்கு அறிமுகமாகி உதவியுள்ளார். அவர்தான் இவர்களது விபச்சாரத்தை செல்போன் செயலி, சமூகவலைதளங்கள் மூலம் பெருக்கியதாகவும் தெரிகிறது. இந்த கும்பல் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையில் சென்னைக்கு வந்த அப்பாவி பெண்கள், குடும்ப வறுமைக்காக வேலை தேடி வந்த பெண்கள் ஆகியோரிடம் ஆசை வார்த்தை கூறி விபச்சாரத்தில் ஈடுபடுத்தியது தெரியவந்தது. சிறுமிகளையும் இந்த தொழிலில் இந்த அரக்க கும்பல் ஈடுபடுத்தியது தெரியவந்தது.
இந்த கும்பலை கைது செய்ததில் அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதில் பெண் புரோக்கர் நதியாவின் மகள் ஒரு பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வருகிறாராம். அவருடன் படிக்கும் அழகான அதே நேரத்தில் ஏழ்மையான மாணவிகளை வீட்டுக்கு அழைத்து வரும்படி நதியா தெரிவிப்பாராம். அதன்படி அவரும் சக மாணவிகளை தினமும் ஒருவரை அழைத்து வந்துள்ளார். அப்போது நதியா, அந்த சிறுமிகளிடம் பெற்றோர் என்ன வேலை செய்கிறார்கள் என்பது விசாரித்து தெரிந்து கொள்வாராம். அவர்களை பிரெய்ன் வாஷ் செய்து நதியா பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியுள்ளார். இந்த சிறுமிகளை உள்ளூர் புரோக்கர் மூலம் லாட்ஜுக்கு அனுப்பிவைப்பாராம்.
நதியாவிடம் விபச்சாரத்திற்கு பெண் கேட்கும் வாடிக்கையாளர்கள் பெரும்பாலும் வயதானவர்களே இருப்பார்களாம். அவர்களும் 18 வயதுக்குள்பட்ட சிறுமிகள்தான் வேண்டும் என அடம்பிடிப்பார்கள். அவர்களிடம் ஒரு சிறுமியை ஒரு இரவுக்கு அனுப்பி வைக்க ரூ 25 ஆயிரம் முதல் ரூ 35 ஆயிரம் வரை நதியா பணம் சம்பாதித்துள்ளதாகவும் தெரிகிறது. இந்த வழக்கில் நதியா, அவருடைய சகோதரி சுமதி, அவருடைய கணவர் ராமசந்திரன், நேபாள நாட்டு பெண்
மாயா ஒலி உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் இன்றைய தினம் மறைமலைநகரை சேர்ந்த விஜயலட்சுமி என்பவரை விபச்சார தடுப்பு பிரிவு போலீஸார் கைது செய்துள்ளனர். சிறுமிகளை எப்படி மூளைச் சலவை செய்ய வேண்டும், என்ன சொல்லி அவர்களை தொழிலில் ஈடுபடுத்த வேண்டும் என்பதை எல்லாம் சொல்லிக் கொடுத்தது விஜயலட்சுமி என விசாரணையில் தெரியவந்தது. எனவே இந்த வழக்கில் இவருடன் சேர்த்து 9 பேர் இதுவரை கைதாகியுள்ளனர்.