2300 ஆண்டுகள் பழமையான தங்க மோதிரம், வியப்பில் ஆராய்ச்சியாளர்கள்
28 May,2024
ஜெருசலேமில் (Jerusalem) உள்ள டேவிட் நகரின் வாகன நிறுத்துமிடத்தில் அகழ்வாராய்ச்சியின் போது 2,300 ஆண்டுகள் பழமையான தங்க மோதிரத்தை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
குறித்த மோதிரம் கடந்த திங்கட்கிழமை (27) கண்டுபிடிக்கப்பட்டதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.
இந்த தங்க மோதிரம் விளையுயர்ந்த சிவப்பு “கார்னெட்டால்” இரத்தின கல்லால் ஆலங்கரிக்கப்பட்டுள்ளமை சிறப்பான அம்சமாக காணப்படுகிறது.
செல்வாக்குடன் வாழ்ந்த மக்கள்
இது ஒரு குழந்தைக்காக செய்யப்பட்டதாக இருக்கலாம் என்று IAA அறிக்கை தெரிவித்துள்ளது.
ஜெருசலேமின் ஆரம்பகால ஹெலனிஸ்டிக் சகாப்தத்தில், அதாவது கிமு 3 அல்லது 4 ஆம் நூற்றாண்டுகளில் இருந்து வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்மூலம் ஜெருசலேமில் வாழ்ந்த பண்டைய கால மக்கள் குறிப்பிடத்தக்க செல்வாக்குடனும், செழிப்புடனும் இருந்ததை இந்த மோதிரம் உணர்த்துவதாக தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.