தொற்றுநோய் தொடர்பில் ஐரோப்பிய நாடுகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
25 May,2024
காய்ச்சல் மற்றும் தொற்றுநோய்க்கு ஐரோப்பிய நாடுகள் (Europe Countries) தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த தகவலை உலக சுகாதார அமைப்பின் (WHO) தொற்றுநோய்க்கான தயார்நிலை செயல் இயக்குனர் வைத்தியர் மரியா வான் கெர்கோவ் (Maria Van Kerkhove) தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கொரோனா (COVID-19) தொற்று ஐரோப்பா எதிர்கொள்ள வேண்டிய கடைசி தொற்றுநோய் அல்ல எனக் கூறிய அவர், எதிர்கால அச்சுறுத்தல் முன்னோடியில்லாத படுகொலைகளை ஏற்படுத்தக்கூடும் என தெரிவித்துள்ளார்.
இருப்பினும், கொரோனா தொற்றின் போது கற்றுக்கொண்ட பாடங்களை உலகம் பயன்படுத்தினால், நோய்ப்பரவல் தாக்கம் மோசமாக இருக்காது என்றும் கூறினார்.