திருமணத்திற்கு முன்பு மணப்பெண்ணை கடத்தும் சடங்கு... பழங்குடியினரின் வினோத பழக்கம்
24 May,2024
நமீபியாவில் திருமணத்திற்கு முன்பு மணமகளைக் கடத்தி நூறு நாட்கள் சிவப்பு சேற்றால் மூடி வைத்திருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
உலகம் முழுவதும் நடைபெறும் திருமண சடங்குகள் வேறுபடுகின்றன. சில சடங்குகள் நகைப்புக்குரியதாக இருக்கும். அப்படி ஒரு சடங்கு, நமீபியா நாட்டில் உள்ள ஹிம்பா பழங்குடியினரின் திருமண விழாவில் உள்ளது.
சுமார் 50,000 மக்கள் தொகை கொண்ட ஹிம்பா பழங்குடி மக்களுக்குச் சொந்த வீடுகள் இருந்தாலும், குடிநீர் கிடைக்காத காரணத்தால் நாடோடி வாழ்க்கை நடத்தி வருகின்றனர். இந்த பழங்குடி மக்களின் விசித்திரமான திருமண பழக்க வழக்கம் தான் தற்போது வெளியுலகிற்கு தெரிய வந்துள்ளது.
அதாவது ஹிம்பா பழங்குடியினரில், திருமணத்திற்கு முன்பே மணப்பெண் கடத்தப்படுகிறார். அவர் 100 நாட்களுக்கு உயர் பாதுகாப்பு அறையில் வைக்கப்படுவார். அந்த நேரத்தில் அவள் உடல் முழுவதும் சிவப்பு சேறு பூசப்படுகிறது. இதனால் மணப்பெண் கடத்தப்படும் போது புதிய ஆடைகள் மற்றும் விலை உயர்ந்த நகைகளால் அலங்கரிக்கப்படுவார்.
இந்த நேரத்தில் அவர் அணியும் சிறப்பு ஆடைகளில் ஓகோரி எனப்படும் தோல் தலைக்கவசம் முக்கியமானது. இது மணப்பெண்ணின் தாய், வழங்கும் பரிசாகும். இது தொடர்பான வீடியோ தான் தற்போது வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், ஒரு ஹிம்பா பெண் தனது உடல் முழுவதும் சிவப்பு சேற்றுடன் அமர்ந்துள்ளார். கால் முதல் முடி வரை, பெண் சிவப்பு சேற்றில் மூடப்பட்டுள்ளது. ஹிம்பா பழங்குடியினரின் இந்த பழக்க வழக்கம், கானாவின் ஃப்ராஃபா பழங்குடியினரும் பின்பற்றி வருகிறார்கள்.
சிவப்பு சேற்றால் மூடப்பட்டுள்ள மணமகளைப் பார்த்து நூறு நாட்கள் மணமகளை சிவப்பு சேற்றில் மூடி வைத்ததற்கு ஏதேனும் அறிவியல் காரணம் உள்ளதா என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். திருமணம் மற்றும் தேனிலவுக்கு முன்பு தோலை உயவூட்டி உடலைச் சுத்தப்படுத்த இப்படி செய்யப்பட்டதா என்று மற்றொருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
பெரும்பாலான மரபுகள், பழக்கவழக்கங்கள் மற்றும் நடைமுறைகள் அறிவியல் முக்கியத்துவம் வாய்ந்தவை என்றும், அவற்றை மக்கள் பின்பற்றுவதற்காக மத நம்பிக்கைகளுடன் சேர்க்கப்படுகின்றன என்றும் மற்றொருவர் பதிவிட்டுள்ளார்.