எம்முடைய இளைய தலைமுறையினர் வார இறுதி நாட்களில் விருந்து என்ற பெயரில் நண்பர்களுடன் ஒன்றிணைந்து அகால வேளைகளில் உடலுக்கு ஒவ்வாத மது அருந்தி, மாமிசம் சாப்பிடுவதை வழக்கமாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
இதனைத் தொடர்ந்து மது அருந்தும் பழக்கத்திற்கு அவர்கள் அடிமையாகி விடுகிறார்கள். இதன் காரணமாக இவர்களுக்கு சில தருணங்களில் ரத்த வாந்தி எடுப்பர். உடனே பதற்றமடைந்து அருகில் இருக்கும் வைத்தியசாலைக்குச் சென்று சிகிச்சைக்கு உட்படுத்திக் கொள்வர்.
அப்போது மருத்துவர்கள் பரிசோதனை செய்து, கல்லீரல் சுருக்க பாதிப்பு ஏற்பட்டதால், ரத்த வாந்தி உண்டாகி இருக்கிறது என்பர். இதற்கு பலூன் ரெட்ரோகிரேடு ட்ரான்ஸ்வெனஸ் ஒபிலிட்ரேசன் ( Baloon Retrograde Transvenous Obliteration) எனும் நவீன சத்திர சிகிச்சை மூலம் முழுமையான நிவாரணத்தை வழங்க இயலும் எனவும் வைத்திய நிபுணர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
எம்முடைய உடலில் மூளை, இதயம் போல் மிகவும் அத்தியாவசியமான உறுப்பு கல்லீரல். இவைதான் உடல் முழுவதும் இதயத்தின் மூலம் பம்ப் செய்யப்படும் சுத்தமான குருதியை இதயத்திற்கு வழங்குகிறது.
மேலும் இதயத்திலிருந்து பெறப்படும் அசுத்தமான குருதியை கல்லீரல் சுத்திகரித்து, மீண்டும் இதயத்திற்கு நல்ல ரத்தத்தை அனுப்புகிறது. கல்லீரலில் தேக்கமடைந்திருக்கும் அசுத்த ரத்தங்கள் முறையாக சுத்திகரிக்கப்பட்டு வெளியேற்றப்பட வேண்டும்.
இவை கல்லீரலில் இயல்பான அளவைவிட கூடுதலாக தேக்கமடைந்தால், இதன் காரணமாக கல்லீரல் சுருக்க பாதிப்பு ஏற்படக்கூடும். இதனால் கல்லீரலில் ஏற்படும் அளவுக்கு அதிகமான அழுத்தத்தின் காரணமாக இரைப்பை மற்றும் குடல் பகுதியில் உள்ள ரத்த நாளங்களில் அடைப்பு மற்றும் ரத்தக் கசிவு போன்ற பாதிப்பு ஏற்படக்கூடும். இந்த ரத்த நாளங்கள் வீக்கமடைந்து ரத்த கசிவு ஏற்பட்டு, இரத்த வாந்தியும் உண்டாகும்.
மேலும் சோர்வு, பசியின்மை, குமட்டல், வாந்தி, உடல் எடை குறைவு, தோல் அரிப்பு, தோலின் நிறம் மாற்றம், மாதவிடாய் சுழற்சியில் சமசாசீரற்ற தன்மை என பல்வேறு அறிகுறிகளும் ஏற்படும்.
அளவுக்கு அதிகமாக மது அருந்துவதாலும், ஹெபடைடிஸ் பி, சி, டி ஆகிய வைரஸ் தொற்று பாதிப்பின் காரணமாகவும் இத்தகைய பாதிப்பு ஏற்படக்கூடும்.
இதன் போது குருதி பரிசோதனை, எம் ஆர் ஐ, சிடி ஸ்கேன், அல்ட்ரா சவுண்ட் பரிசோதனை, திசு பரிசோதனை ஆகியவற்றை மேற்கொண்டு பாதிப்பின் தன்மையை துல்லியமாக அவதானிப்பர்.
இதனைத் தொடர்ந்து ரத்த வாந்தி பாதிப்பிற்கு பலூன் ரெட்ரோகிரேடு ட்ரான்ஸ்வெனஸ் ஒபிலிட்ரேசன் எனும் சத்திர சிகிச்சையை மேற்கொண்டு முழுமையான மற்றும் முதன்மையான நிவாரணத்தை வழங்குவர்.
இத்தகைய சத்திர சிகிச்சையின் போது கல்லீரலில் மற்றும் இரைப்பையில் வீக்கம் அடைந்திருக்கும் ரத்த நாளங்களில் ரத்த நாளங்களை சீராக்குவர்.
மேலும் ரத்தக் கசிவு ஏற்பட்டிருக்கும் பகுதிகளையும் சீரமைப்பர். இதற்குப் பின்னர் மருத்துவர்கள் வைத்தியர்கள் பரிந்துரைக்கும் வாழ்க்கை நடைமுறை மற்றும் உணவு முறையை உறுதியாக பின்பற்றினால் இத்தகைய பாதிப்பு மீண்டும் ஏற்படாமல் தற்காத்துக் கொள்ளலாம்