செவ்வாய் கிரகத்தில் ஏலியன்கள் நடமாட்டமா...? நாசாவின் வேட்டை தீவிரம்!
21 May,2024
செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ்ந்ததற்கான அடையாளம் இருக்கிறதா என்பதை ஆய்வு செய்வதற்காக, அங்கிருந்து பாறை மற்றும் மண் மாதிரிகளை பூமிக்கு கொண்டு வர
செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ்ந்ததற்கான அடையாளம் இருக்கிறதா என்பதை ஆய்வு செய்வதற்காக, அங்கிருந்து பாறை மற்றும் மண் மாதிரிகளை பூமிக்கு கொண்டு வர அமெரிக்காவின் நாசா திட்டமிட்டுள்ளது.
நமக்கு அருகில் இருக்கும் கிரகங்களில் வேற்றுகிரகவாசிகள் இருக்கிறார்களா? என்று விஞ்ஞானிகள் சல்லடைப் போட்டு சலித்துவிட்டார்கள். ஆனால், அதற்கான தடயம் எதுவும் இல்லை. இருப்பினும், செவ்வாய் கிரகத்தில் வேறு உயிரினங்கள் ஏதாவது வாழ்ந்ததற்கான அடையாளம் இருக்கிறதா என்பதை ஆய்வு செய்ய செவ்வாயின் பாறை மாதிரிகளை பூமிக்கு கொண்டு வர நாசா முடிவு செய்துள்ளது.
இதற்காக ஐரோப்பிய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ESA உடன் சேர்ந்து எக்ஸோமார்ஸ் ரோசலின்ட் ஃபிராங்க்ளின் ரோவரை வரும் 2028ஆம் ஆண்டு ஏவ முடிவு செய்திருக்கிறது. இந்த ஒப்பந்தத்தின்படி, நாசா தனித்தன்மை வாய்ந்த ரோவர் உந்துவிசை அமைப்பு கூறுகள் மற்றும் ஹீட்டர்களை வெற்றிகரமாக தரையிறங்குவதற்கு தேவைப்படும். செவ்வாயில் தரையிறங்கும் ரோவர், அங்குள்ள பனி மாதிரிகளை சேகரிப்பதற்காக அதிகபட்சமாக 6.5 அடிக்கு கீழ் தோண்டி எடுக்கும்.
பல கோடி ரூபாய் மதிப்பிலான இந்த திட்டத்தின் மூலம் 300 கிராம் மண் மாதிரிகளை பூமிக்கு கொண்டு வந்து ஆய்வு நடத்த நாசா முடிவு செய்துள்ளது. இதன்மூலம் செவ்வாய் கிரகத்தில் இதற்கு முன்பாக உயிரினங்கள் வாழ்ந்ததா? என்பது தெரியவரும் என்றும், அதை அடிப்படையாக கொண்டு மனிதர்கள் உயிர் வாழ்வதற்கான சாத்தியங்களை ஆய்வு செய்யவும் நாசா திட்டமிட்டுள்ளது.