ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசி ஏவுகணைத் தாக்குதலால் கொல்லப்பட்டாரா..!
20 May,2024
கடந்த ஞாயிற்றுக்கிழமை ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசி(Ebrahim Raisi) சென்ற ஹெலிகொப்படர் விபத்துக்குள்ளான நிலையில் அவரும் அவருடன் பயணித்த அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் உட்பட முக்கியமானவர்கள் உயிரிழந்தனர்.
இந்த நிலையில், ஈரான்அதிபர் கலாநிதி இப்ராகிம் ரைசி பயணித்த பெல் 212 ரக ஹெலிகொப்டர் தீயில் முற்றாக எரிந்து நாசமாகியதை அடுத்து பாரிய சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன் காரணமாக விபத்து தொடர்பில் ஈரான் பாதுகாப்பு படையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக அந்த ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசி ஏவுகணைத் தாக்குதலால் கொல்லப்பட்டாரா..! | Iran S President
ஏவுகணைத் தாக்குதலால் ஹெலிகொப்டர் முற்றாக எரிந்து அழிந்ததா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
ஏற்கனவே இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் தீராப்பகை உள்ள நிலையில் இந்த சந்தேகங்களை மறுக்க முடியாதுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஈரான் உலங்குவானூர்தியை தாக்கியது இஸ்ரேலின் மொசாட்டா?
கடும்போக்காளர் என்று கூறப்பட்டுவருபவரும், மேற்குலகின் முக்கிய எதிரியாக அடையாளப்படுத்தப்பட்டுவந்தவருமான ஈரானிய அதிபர் Ebrahim Raisi இன் மரணத்தின் பின்னணியில் இஸ்ரேலின் கரங்கள் இருக்கலாமோ என்று சந்தேகம் வெளியிடப்பட்டு வருகின்றது.
இஸ்ரேல் எதற்காக ஈரான் அதிபரை கொல்லவேண்டும்?
செயற்கையாக ஒரு உலங்கு வானூர்தி விபத்தை யாராலும் ஏற்படுத்த முடியுமா?
ஒரு விமானத்தின் மீது நேரடியான தாக்குதலை மேற்கொள்ளாமல், யாருக்கும் தெரியாத முறையிலான ஒரு விபத்தை ஏற்படுத்துவதற்குச் சாத்தியம் இருக்கின்றதா?
இஸ்ரேலினால் இது முடியுமா?