விபத்தில் உயிரிழந்த ஈரான் அதிபர்... பட்டாசுகள் வெடித்து கொண்டாடிய மக்கள்... ஈரானில் பகீர்
20 May,2024
ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைஸி, ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அந்நாட்டு மக்களில் சிலர் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் வருவது உலக நாடுகளிடையே பேசு பொருளாக மாறி உள்ளது.
ஈரான் நாட்டின் அதிபரான இப்ராஹிம் ரைஸி நேற்று ஹெலிகாப்டர் மூலம் நாட்டின் வடக்கு பகுதியில் அசர்பைஜன் நாட்டின் எல்லையில் உள்ள ஜூல்பா பகுதியில் அணை ஒன்றை திறந்து வைப்பதற்காக சென்றிருந்தார். நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு ஹெலிகாப்டர் மூலம் அவர் தலைநகர் டெஹ்ரானுக்கு திரும்பி சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.