விடுதலைப் புலிகளின் தலைவர் மற்றும் அவரது குடும்பத்தாருக்கு டென்மார்க்கில் அஞ்சலி
18 May,2024
விடுதலைப் புலிகளின் தலைவர் மற்றும் அவரது குடும்பத்தாருக்கு டென்மார்க்கில் அவரது குடும்பத்தார் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின்(Velupillai Prabhakaran) சகோதரர் வேலுப்பிள்ளை மனோகரன் உள்ளிட்ட அவரின் குடும்பத்தார் மற்றும் பெருந்திரளான மக்கள் இணைந்து இவ்வாறு தமது உணர்வுபூர்வ அஞ்சலிகளை செலுத்தியிருந்தனர்.
முள்ளிவாய்க்கால் யுத்தம் மௌனிக்கப்பட்டு 15 வருடங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், இதுவரை விடுதலைப் புலிகளின் தலைவருக்கோ அவரது குடும்பத்தினருக்கோ எவ்வித அஞ்சலிகளும், நினைவேந்தல்களும் நடத்தப்பட்டதில்லை.
இந்தநிலையில், இந்த வருடம் முதன் முறையாக விடுதலைப் புலிகளின் தலைவர் உள்ளிட்ட குடும்பத்தினருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
இதன்போது, விடுதலைப் புலிகளின் தலைவருக்கு டென்மார்க்கில் வைத்து அவரது சகோதரர் மனோகரன் அஞ்சலிசெலுத்தப்பட்டுள்ளது.