ஸ்லோவாக்கியா பிரதமர் ராபர்ட் ஃபிகோ மீது திடீர் துப்பாக்கி சூடு..
15 May,2024
ஸ்லோவாக்கியா பிரதமர் ராபர்ட் ஃபிகோ மீது நடைபெற்ற துப்பாக்கி சூடு சம்பவத்தில் காயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஸ்லோவாக்கியா பிரதமர் ராபர்ட் ஃபிகோ அரசு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வருகை தந்த போது துப்பாகி சூடு நடைபெற்றுள்ளது. அடையாளம் தெரியாத நபர் ஒருவர் பிரதமரை நோக்கி 4 முறை சுட்டுள்ளார். இதில் ஒரு குண்டு பிரதமர் ராபர்ட் ஃபிகோவின் அடிவயிற்றில் பாய்ந்ததாக அந்நாட்டு செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.
ஸ்லோவாக்கியா தலைநகரில் இருந்து வடகிழக்கே சுமார் 150 கி.மீ தொலைவில் உள்ள ஹண்ட்லோவாவில் இந்த துப்பாக்கி சூடு சம்பவம் நடைபெற்றுள்ளது.
இதையடுத்து பாதுகாவலர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். பிரதமர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சம்பவம் ஸ்லோவாக்கியா நாட்டில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீசாரும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.