வேனில் வந்தபோது பெண் போலீசார் என்னை தாக்கினார்கள்,சவுக்கு சங்கர் அதிர்ச்சி தகவல்..!
15 May,2024
கோவையிலிருந்து திருச்சிக்கு அழைத்து வரப்பட்ட போது வேலையில் தன்னை பெண் போலீசார் தாக்கியதாக சவுக்கு சங்கர் நீதிமன்றத்தில் அதிர்ச்சி தகவல் அளித்திருப்பது பரப்பப்பட்டு ஏற்படுத்தி உள்ளது.
பெண் போலீசாரை சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்ட நிலையில் அதன் பின்னர் அவர் மீது பல வழக்குகள் குவிந்துள்ளது என்பதும் அனைத்து வழக்குகளிலும் அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் வழக்கு ஒன்றுக்காக கோவையில் இருந்து திருச்சிக்கு வேன் மூலம் சவுக்கு சங்கர் அழைத்துவரப்பட்ட நிலையில் அந்த வேனில் முழுக்க முழுக்க பெண் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர் என்று செய்திகள் வெளியானது.
இந்த நிலையில் கோவையில் இருந்து திருச்சிக்கு வானில் அழைத்துச் செல்லும் வழியில் பாதுகாப்புக்கு வந்த பெண் காவலர்கள் தன்னை தாக்கியதாக திருச்சி மகிளா நீதிமன்றத்தில் நீதிபதியிடம் சவுக்கு சங்கர் குற்றஞ்சாட்டி உள்ளார். இந்த குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.