12 நாட்கள் நீடித்த டிராஃபிக்.. உணவு, தண்ணீர் இன்றி தவித்த மக்கள்.. எங்கு தெரியுமா?
14 May,2024
சென்னை, பெங்களூரு, மும்பை, டெல்லி உள்ளிட்ட பெரு நகரங்களில் கடும் போக்குவரத்து நிலவும். காலை மற்றும் மாலை வேலைகளில் இந்த சாலைகளில் பயணிப்பது சற்று கடினமாக இருக்கும்.
பெருநகரங்களில் எந்த அளவு வளர்ச்சி இருக்கிறதோ அந்த அளவுக்கு போக்குவரத்து நெரிசலும் இருக்கும். காலை மற்றும் மாலையில் பள்ளி, கல்லூரிக்கு செல்வது, வேலைக்கு செல்வது என பொதுமக்கள் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருப்பதால் சாலைகள் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படும்.
இவ்வாறு சாலையில் அணிவகுத்து நிற்கும் வாகனங்களால் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் 5 முதம் 10 நிமிடங்கள் வரை நீடிக்கும். அதன் பிறகு போக்குவரத்து நெரிசல் சரிசெய்யப்பட்டு இயல்பு நிலைக்கு திரும்பும்.
சென்னை, பெங்களூரு, மும்பை, டெல்லி உள்ளிட்ட பெரு நகரங்களில் கடும் போக்குவரத்து நிலவும். காலை மற்றும் மாலை வேலைகளில் இந்த சாலைகளில் பயணிப்பது சற்று கடினமாக இருக்கும். சிறிது நேரத்திற்கு பிறகு போக்குவரத்து நெரிசல் சரிசெய்யப்படும்.
ஆனால் ஒரு குறிப்பிட்ட நகரத்தில் சுமார் 12 நாட்களாக போக்குவரத்து நெரிசல் நீடித்தது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா.
ஆகஸ்ட் 14, 2010 அன்று சீனாவில் இந்த போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த போக்குவரத்து நெரிசல் மொத்தம் 12 நாட்கள் நீடித்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது.
சீனாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் தான் இந்த போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மங்கோலியாவிலிருந்து பெய்ஜிங்கிற்கு நிலக்கரி மற்றும் கட்டுமானப் பொருட்களை ஏற்றிச் சென்ற லாரிகளால் இந்த பயங்கரமான நெரிசல் ஏற்பட்டது.
அதுமட்டுமன்றி பெய்ஜிங் மற்றும் திபெத்தை இணைக்கும் நெடுஞ்சாலை அமைக்கும் பணியும் நடைபெற்றது. இதன் காரணமாக அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் நிலவியது.
அப்போது ஒவ்வொரு வாகனமும் ஒரு நாளைக்கு சராசரியாக 1 கிலோ மீட்டர் தூரம் பயணித்ததாக கூறப்படுகிறது. சில வாகனங்கள் 5 நாட்களுக்கும் மேலாக ஒரே இடத்தில் நின்றுக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
லாரிகளை இரவில் திசை திருப்பியதன் மூலம் 12 நாட்கள் கழித்து சரியாக ஆகஸ்ட் 26 ஆம் தேதி போக்குவரத்து நெரிசல் சரிசெய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. 2010 ஆம் ஆண்டு இந்த சம்பவம் நடைபெற்று இருந்தாலும் இதுவரை சீனாவின் மிகப்பெரிய போக்குவரத்து நெரிசலாக இந்த சம்பவம் அமைந்துள்ளது என்பது குறிப்பிடதக்கது.