உலகின் மிகப்பெரிய விமான நிலையம்... எங்கு அமைக்கப்படுகிறது தெரியுமா?
13 May,2024
இதன் பணிகள் முழுவதுமாக நிறைவடையும்போது இதுதான் உலகின் மிகப்பெரிய விமான நிலையமாக இருக்கும்.
உலகின் மிகபெரிய விமான நிலையமான துபாயின் அல் மாக்தோம் (Al Maktoum) சர்வதேச விமான நிலையத்தின் கட்டுமானப் பணிகள் தொடங்கியுள்ளது. இதன் பணிகள் முழுவதுமாக நிறைவடையும்போது இதுதான் உலகின் மிகப்பெரிய விமான நிலையமாக இருக்கும்.
இங்கு 260 மில்லியன் பயணிகளை கையாளும் அளவிற்கு வசதியுள்ளது. இந்த விமான நிலையத்தின் ஒட்டுமொத்த பரப்பு 12,000 கால்பந்து மைதானம் அளவிற்கு இருக்கும் என கூறப்படுகிறது. அல் மாக்தோம் சர்வதேச விமான நிலையத்தின் புதிய பயணிகள் டெர்மினலுக்கான வடிவமைப்பிற்கு சமீபத்தில் தான் துபாய் மன்னர் ஷேக் முகமது ரஷீத் அல் மாக்தோம் ஒப்புதல் வழங்கியுள்ளார்.