அமெரிக்காவில் அதிகம் பேசப்படும் இந்திய மொழிகள்.. தமிழுக்கு எந்த இடம் தெரியுமா?
10 May,2024
அமெரிக்காவில் வாழும் இந்திய மொழி பேசும் மக்களின் எண்ணிக்கையை கணக்கிடும் போது தமிழ் மொழி பேசும் மக்களின் எண்ணிக்கை எவ்வளவு உள்ளது என்பதையும் எண்ணிக்கையில் எத்தனையாவது இடத்தில் உள்ளது என்பதையும் வாருங்கள் தெரிந்துகொள்ளலாம்.
உலகம் முழுவதும் மக்களை இணைக்கும் இணைப்பு பாலமாக மொழி விளங்குகின்றன. மொழி என்ற ஒன்று உருவாகவில்லை எனில் உலக மக்கள் ஒன்றிணைக்கப்பட்டிருக்க வாய்ப்பே இல்லை என்று தான் கூற வேண்டும்.
பல மொழி பேசும் மக்களும் அனைத்து நாடுகளிலும் பரவி உள்ளனர். அவ்வாறு உலகின் வல்லரசு நாடான அமெரிக்காவிலும் பல மொழி பேசும் மக்களும் உள்ளனர்.
அவ்வாறு அமெரிக்காவில் வாழும் இந்திய மொழி பேசும் மக்களின் எண்ணிக்கையை கணக்கிடும் போது தமிழ் மொழி பேசும் மக்களின் எண்ணிக்கை எவ்வளவு உள்ளது என்பதையும் எண்ணிக்கையில் எத்தனையாவது இடத்தில் உள்ளது என்பதையும் வாருங்கள் தெரிந்துகொள்ளலாம்.
இந்தியா மட்டுமின்றி அமெரிக்காவிலும் அதிகம் பேசும் மொழியாக இந்தி உள்ளது. பல அமெரிக்க வாழ் இந்தியர்கள் பேசும் மொழியாக இந்தி அமைந்துள்ளது.
இந்திக்கு அடுத்தப்படியாக குஜராத்தி மொழியும் அதற்கு அடுத்த நிலையில் தெலுங்கும் அமெரிக்காவில் அதிக அளவில் பேசப்படுகிறது. இதற்கு அடுத்தப்படியாக பெங்காலி மொழி அமைந்துள்ளது.
அப்போ நம்ம தமிழ் மொழி எந்த இடத்தில் உள்ளது என யோசிக்கிறீர்களா. நம் தமிழ் மொழி ஐந்தாவது இடத்தில் உள்ளது. அமெரிக்காவில் வாழும் தமிழர்கள் நமது மரபுகளையும் பாரம்பரியத்தையும் வளர்த்து வருகின்றனர் என்பது கூடுதல் சிறப்பு.