மகாயோகி விசுவாமித்திரர் தன்னை மறந்து, இந்த உலக இன்பங்களை எல்லாம் துறந்து இறைவனை நோக்கி தவம் செய்தவர். செல்வம், புகழ், பதவி, ராஜாங்கம் அனைத்தையும் தூக்கி எறிந்த அவர் முன்னே, அழகுப் பதுமையாக மேனகை வந்து நின்றதும், விசுவாமித்திரரால் தொடர்ந்து தவம் செய்ய முடியவில்லை.
அதாவது, தொடர்ந்து பிரம்மசரியத்தைக் கடைப்பிடிக்க முடியாமல் மேனகையுடன் காதல் வசப்பட்டார். எப்பேர்பட்ட மனிதர்களாலும் காமத்தை முழுமையாக வெல்ல முடியாது என்பதற்கு விசுவாமித்திரரே சாட்சி.
இந்த உலகில் காமத்தின் குழந்தைகளாகப் பிறந்திருக்கும் அனைத்து உயிரினங்களிலும், அனைத்து அணுக்களிலும் இயற்கைச் சக்தியாக காமம் நிறைந்துள்ளது.
அதனால்தான் ‘சொல்லித் தெரிவதில்லை மன்மதக்கலை’ என்றார்கள். காம சக்தியை எந்த ஓர் உயிராலும் கட்டுப்படுத்த இயலாது. எவ்வளவு பெரிய ஞானியாக இருந்தாலும் காமத்தைக் கடந்துதான் செல்ல வேண்டும்.
‘காமத்தை அடக்க வேண்டும். அப்போதுதான் இறைவனை அடைய முடியும்’ என்று பல்வேறு மதங்கள் போதனை செய்வதுதான், இன்றைய மனித குலத்தைப் பெரும் குழப்பத்தில் ஆழ்த்தியிருக்கிறது.
அதாவது, இயற்கையாக எழும் காமத்தை ஒரு தவறான எண்ணமாகச் சித்தரித்து, அதை அடக்க வேண்டும் என்றும், காமம் ஒரு பாவம் என்பது போன்றும் விஷவிதைகள் மனிதர்களிடையே திட்டமிட்டு விதைக்கப்பட்டு வருகின்றன.
அதனால், காமத்தை ஒரு சந்தோஷ அனுபவமாகக் கருதும் மனோபாவம் மறைந்து, ஏதோ அழகிய விஷமாகப் பயந்து பயந்து அனுபவிக்கிறார்கள் மக்கள்.
காம சக்தியை அனுபவிப்பதில் எந்தத் தவறும் இல்லை என்பதை மனித குலத்துக்கு ஏகோபித்த குரலில் உறுதிபட தெரிவிக்கவே, கோயில் சிலைகளிலும், சாஸ்திர நூல்களிலும் காமசாஸ்திரத்தை நம் முன்னோர்கள் வடித்துவைத்திருக்கிறார்கள்.
ஆனால், இடைக்காலத்தில் சில போலி மதவாதிகள், காம சக்தியை அடக்கினால்தான் இறைவனை அடையமுடியும் என்று சொல்லிவருவதை மக்களும் நம்பத் தொடங்கிய காலத்தில்தான் இல்வாழ்க்கை சிக்கலாகத் தொடங்கியது.
போலி மதவாதிகளுக்குப் பயந்து காமம் என்பதை சந்ததி உருவாக்க மட்டுமே பயன்படுத்தத் தொடங்கினார்கள். கணவன்-மனைவிகூட, காமத்தை இன்பமாக அனுபவிக்காமல், அவசர அவசரமாக இயங்கி பிள்ளை பெற்றார்கள்.
காமம் பற்றிப் பேசுவதும் பாவம் என்ற நிலை ஏற்பட்டுவிடவே, மனித வாழ்வுக்கு மட்டுமே உரித்தான உச்சகட்ட இன்பம், கிடைப்பதற்கரிய புதையலாகிப்போனது. உச்சகட்டம் என்பதை அறியாமலே மனிதர்கள் கலவி மேற்கொண்டார்கள்.
ஏகப்பட்ட பிள்ளைகளை இயந்திரத்தனமாகப் பெற்றுப்போட்டார்கள். காமம் என்பதன் முழுமையை அறியாமலே கோடானு கோடி மக்கள் இறந்தும் போனார்கள்.
20-ம் நூற்றாண்டில் மனித வாழ்க்கை பெரும் சிக்கலைச் சந்தித்தது. ஆம், காமத்தைப் பெரும் பாவம் என்று ஒரு கும்பல் உரக்கச் சொன்னது. குறிப்பாக, காமத்தைப் பற்றி பெண்கள் பேசுவதும், அவர்களாகவே இயங்குவதும் தவறாகச் சொல்லப்பட்டது.
ஆனால், பொருளாதாரச் சுதந்தரம் பெற்றுவிட்ட பெண், காம சுகத்திலும் ஆணிடம் இருந்து விடுதலை பெற விரும்பினாள். காமம், மனிதர்களின் பிறப்புரிமை என்று பெண்கள் கிளர்ந்தெழத் தொடங்கினார்கள்.
இதனால், குடும்ப வாழ்வில் பல்வேறு சிக்கல்கள், சண்டைகள், தகராறுகள் நிகழ்ந்தன. காமம் பற்றி அறிந்துகொள்ள இந்த நூற்றாண்டில்தான் மருத்துவமனையைத் தேடி மக்கள் வரத் தொடங்கி இருக்கிறார்கள்.
காமத்தில் இருக்கும் உச்சகட்டத்தை அறிந்துகொள்ளும் ஆர்வம் ஆண்-பெண் இருவருக்கும் வந்திருக்கிறது. ஆகவே, இந்தத் தலைமுறையினர் தெளிவாக அறிந்துகொள்ள உதவிகரமாக இருக்கும் வகையில் இந்தப் புத்தகம் உருவாக்கப்பட்டுள்ளது.
இல்லற வாழ்வில் தம்பதியருக்கிடையே நிகழும் கலவியில், உச்சகட்டம் என்பது ஓர் அற்புத சக்தி. உச்சி முதல் உள்ளங்கால் வரை அனைத்து உறுப்புகளும் ஒன்றுசேர்ந்து இயங்கும் அற்புத சக்தி நிலையே உச்சகட்டம் (முன் பக்க அட்டை மேட்டர்). உடலில் எத்தனை இன்பம் வைத்தாய் என் இறைவா என்று நன்றி சொல்லும் அற்புத நிலையே உச்சகட்டம்.
காமக் களியாட்டத்தில் ஆண்களால் உடனடியாகப் பங்குபெற முடியும் என்பதால், எத்தனை விரைவாக இன்பம் பெற முடியுமோ அத்தனை விரைவாக இன்பம் பெற்று கலவியில் இருந்து வெளியேற நினைக்கிறார்கள்.
ஏனெனில், ஆணின் காம அலைவடிவம் செங்குத்தானது. நேரடியாக உயரே எழுந்து உடனே கீழே இறங்கக்கூடியது. ஆனால், பெண்ணின் காம அலைவடிவம் அப்படியல்ல.
நிதானமாக, படிப்படியாக உயர்ந்து செல்லக்கூடியது. ஒரே நேரத்தில் மூன்று தடவைக்கு மேலும் உயரத்தைத் தொடக்கூடியது. அதனால், பெண்களால் குறுகிய நேரத்தில் உச்சகட்டத்தை அடையமுடியாது என்றாலும், அதிகமான நேரம் உச்சகட்டத்தை அனுபவிக்க முடியும்.
பெண்கள் உச்சகட்டம் அடைய காலதாமதம் ஆகும் என்பதால்தான், அவளைத் திருப்திபடுத்த பயந்த ஆண்கள், அவளுக்கு உச்சகட்டம் என்ற ஒன்று இருப்பதையே காட்டாமல் அவசர அவசரமாக காமத்தை முடித்துக்கொண்டார்கள்.
காமத்தில் மூன்று செயல்கள் காமத்தில் மூன்று செயல்கள் நடைபெறுகிறது. முதலாவது, நேரம். அதாவது எப்போது காம உணர்வு ஏற்படுகிறதோ, அந்த நேரத்தில் இருந்து, அந்த இன்பத்தை அடையும் வரை அவர்களுக்கு இடையே நேரம் என்பதே இருப்பதில்லை.
ஆம், காமத்துக்கு நேரம் என்பதே கிடையாது. அடுத்தது, காமத்தில் ‘நான்’ என்பது மறைந்துபோகிறது. ஒரு மேலதிகாரி, வேலைக்காரன், காவல்காரன், கண்டிப்பான அப்பாஸஸ.என்று எந்த ஒரு பாத்திரத்துக்கும் படுக்கை அறையில் இடம் கிடையாது.
காமத்தின் முன்னே அனைவரும் ‘நான்’ இல்லாத மனிதர்கள். மூன்றாவது, இயற்கையுடன் இணைவது. ஆம், காமத்தின் செயல்பாடுகளின்போது இயற்கையுடன் மனிதர்கள் இணைகிறார்கள்.
வலி, வேதனை, பசி, கோபம், ஆத்திரம் போன்ற அத்தனை உணர்வுகளும் மறந்து இன்பம் என்ற ஒரே நோக்கத்துடன் இயற்கையுடன் இணைந்து பிரபஞ்சமாக மாறுகிறார்கள்.
எவ்வளவு தூரம் காமத்தை அனுபவிக்கிறார்களோ, அவ்வளவு தூரம் தம்பதிகள் இடையே அந்நியோன்யம் அதிகரிக்கிறது. காமத்தைச் சரியான பாதையில் அனுபவிக்கத் தெரியாமல், மிகச்சிறிய நேரமே பலர் இன்பத்தை அனுபவிப்பதால், காமத்தை ‘சிற்றின்பம்’ என்கிறார்கள்.
பேரின்பம் எனப்படும் உச்சகட்டத்தை அடைவதற்கு தடையாக இருப்பது குற்ற உணர்வுடன் கூடிய மனநிலைதான். அவசரமின்றி, ஆறுதலாகவும், அன்புடனும், ஆனந்தமாகவும் காமத்தை ஒவ்வொரு கணமும் முழுமையாகவும் அணுஅணுவாகவும் ரசிக்கும்போது உச்சகட்டம் எனப்படும் பேரின்பத்தைக் கண்டறியலாம்.
பேரின்பம் என்பது கடவுளைக் கண்டறிவது. சிற்றின்பம் என்பது மனித உடல்களுக்குள் கிடைப்பது என்று வேதாந்தவாதிகள் சொல்லிவைத்திருப்பதைப் படுக்கை அறையில் கடைப்பிடிக்க வேண்டிய அவசியம் இல்லை.
எதற்காக உச்சகட்டம் அடைய வேண்டும்? உடலுக்குள் ஒளிந்திருக்கும் இன்பத்தை அனுபவிக்க மட்டுமல்ல, மனித விடுதலைக்கும், தம்பதியர் ஒருவருக்கொருவர் புரிந்துகொள்வதற்கும் உச்சகட்டம் வழிவகுக்கிறது.
உச்சகட்டத்தை அடைந்த தம்பதியினர் எவரும் விவாகரத்து கோரி நீதிமன்றத்தை நாடுவதில்லை. என்றால் என்னவென்றே தெரியாமல், கலவி இன்பம் அனுபவிக்கிறார்கள் என்பதுதான் கொடுமையாகும். இனியும் தொடரலாமா இந்த நிலைமை?
அந்தக் காலத்தில் பாலியல்!
சங்க காலம் எனப்படும் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனிதர்கள், பாலியலை மிகவும் இயற்கையானதாகக் கருதினர். அதனால்தான் பாலுறவை காமக்கலையாக (Eroticism) பார்த்து, ரசித்து வாழ்ந்தார்கள்.
பாலியல் ஆர்வம், உறவு, கலவியில் பெறும் இன்பம் என்று மூன்று நிலைகளில் ஆணும் பெண்ணும் சேர்ந்து உடல் மற்றும் மனரீதியில் பெறும் அனுபவங்கள் மற்றும் அதனால் ஏற்படும் மாற்றங்களுக்கு சங்க இலக்கியங்கள் முக்கியத்துவம் தந்துள்ளன.
‘நிலாவைப் பிடித்துத் தரவா?’, ‘வானத்தை வளைக்கவா?’ என்று கேட்பதெல்லாம் நடக்கக்கூடிய காரியமில்லை என்றாலும், காதலன் தன்னுடைய காதலியிடம் இருந்து பெறும் சுகத்துக்காக எதையும் செய்யத் தயாராக இருக்கிறான் என்பதை உறுதியுடன் சொல்லும் நிலையாகும்.
‘அவளுடன் ஒரே ஒரு முறை உறவுகொண்டால்போதும், அதற்குப்பிறகு அரை நாள் வாழ்க்கைகூடத் தேவை இல்லை, உயிரை விட்டு விடலாம்’ என்று பிதற்றுகிறான் ஒரு காதலன்.
‘கடலால் சூழப்பட்ட இந்த முழு உலகும் பரிசாகக் கிடைத்தால்கூட, தன் காதலியின் பூப்போன்ற மேனியை அணைத்துப் பெறும் இன்பத்துக்கு ஈடாக முடியாது’ என்று புலம்புகிறான் ஒரு காதலன்.
சங்க காலத்தில் ஆண்கள் மட்டுமே, பெண் மீதான விருப்பத்தை வெளிக்காட்டுகிறான் என்றில்லை; பெண்ணும் தன்னுடைய பாலியல் விருப்பத்தைத் தயங்காமல் வெளியிடுகிறாள்.
‘தலைவன் வாழும் மலையில் இருந்து வரும் நீரில் மிதந்து வரும் காந்தள் மலரை முகர்ந்து பார்ப்பதே, தனக்கு இன்பம் கொடுப்பதாக உள்ளது’ என்று வெளிப்படையாகப் பேசுகிறாள் காதலி.
காதல் வயப்பட்டு, உள்ளத்தால் இணைந்த ஆணும் பெண்ணும் உடலுறவுகொள்வது இயல்பானதே என்று சத்தியம் செய்கிறது சங்க இலக்கியம். அதனாலே திருமணத்துக்கு முந்தைய காலங்களில், காதலர்கள் உறவுகொள்வதை தவறாகச் சித்தரிக்காமல் அங்கீகாரமே கொடுத்திருக்கிறது.
காமம் என்ற சொல், காதலுடன் நெருங்கிய தொடர்புடையதாகவே விளங்கியது என்று சொல்லலாம். பெண்களைப் பொறுத்தவரை தங்களது தேகத்தில் வழியும் இளமையானது, ஆண்களின் ஆசைக்குப் பயன்படாமல் வீணாகக் கழிவதே பெரும் வருத்தத்தைக் கொடுத்திருக்கிறது.
பெண்கள் காமவயப்பட்டு, காம உணர்வுகளை வெளிப்படுத்தும் அருமையான பாடல்கள் பல சங்க இலக்கியத் தொகுப்பில் இடம் பெற்றுள்ளன.
‘என் காதல் நோயின் கொடுமை அறியாமல் தென்றல் காற்று அலைக்கழிக்கிறது; அதை அறியாமல் இந்த ஊரும் உறங்குகிறது. என் நிலையை எப்படிக் கூறுவேன்? முட்டுவேனோ? தாக்குவேனோ? கூவுவேனோ?’ என்ற அகநாநூறு பாடல் வரிகள் பெண்ணின் காமம்மிக்க மனத்தைத் துல்லியமாகச் சித்தரிக்கிறது.
இதுபோன்ற பாடல்களில் இருந்து பாலியல் இன்பம் அனுபவிப்பதில் பெண்ணும் பெரும் ஆர்வம்கொண்டவளாக இருந்திருக்கிறாள் என்பதை அறியமுடிகிறது.
பொதுவாகவே ஆணின் ஆசை, எதிர்பார்ப்பு எல்லாமே பெண்ணுடன் உடலுறவுகொள்வது என்ற சிந்தனையுடனே இருக்கும். ஆனால், பெண்ணின் காம வேட்கையானது வெவ்வேறு தளங்களில் நுட்பமாக விரியக்கூடியதாக இருக்கும்.
அதாவது, காதலன் வருகையைப் பார்த்தால்போதும், காதலன் மார்பில் சாய்ந்தால்போதும், காதலன் தலைமுடியை வருட வேண்டும், காதலனுக்கு வாய்க்கு ருசியாக உணவு கொடுக்க வேண்டும் என்று பெண்ணின் காமம் ஏராளமான ஆசைகள் கொண்டதாக இருக்கிறது.
பெண் தன்னுடைய காமத்தைப் பொருள்படுத்தாமல் ஆணுக்கு இன்பம் கொடுப்பதையே தன்னுடைய நோக்கமாக முன்னிறுத்தி மகிழ்வதையும் வழக்கமாக வைத்திருக்கிறாள்.
ஆணின்ஸஸஸ மனத்தை பெண் வசப்படுத்த நினைக்கிறாள். ஆனால், மனம் என்ற ஒன்று இருப்பதையே மறந்து அல்லது புறக்கணித்து, பெண்ணின் உடலை அதிகாரம் செலுத்தவே முயற்சிக்கிறான் ஆண்.
பிரிந்து சென்ற கணவன் இன்னொரு பெண்ணான பரத்தையின் வீட்டில் தங்கிவிட்ட பிறகு, காதல் பெண்ணின் மனம் படும் துயரம் அளவற்றது.
‘நீ எனக்கு யார்? நான் ஊடல் கொள்வதற்கு நீ என்ன உறவு? நீ பரத்தையிடம் போ. உன்னைத் தடுக்க யார் உள்ளார்?’ என்று மனம் வெதும்புவதும், காத்திருக்கும் காமத்தின் வெளிப்பாடுதான். இரவுப்பொழுதில் நிச்சயம் வருவதாகக் கூறிய காதலன் வராத நிலையில் ஏக்கத்துடன் தூங்குகிறாள் ஒரு பெண்.
காதலனுடன் பாலுறவுகொண்டதாகக் கனவு கண்டு மயங்கிப் பின்னர் விழித்தெழுந்து, குழப்பத்துடன் அவன் அருகில் படுத்திருக்கிறானோ எனத் தடவிப் பார்க்கும் பாடல், காமவயப்பட்ட பெண்ணின் ஆழ் மனத்தைத் தெளிவாகப் பதிவாக்கியுள்ளது.
பெண்கள் உள்ளத்திலும் காமரசம் நிரம்பி வழிகிறது என்பதற்கு இந்தப் பாடல் கருத்தே நல்ல உதாரணம். பொருள் தேடிப் பிரிந்துபோன கணவனுக்காக வீட்டில் காத்திருக்கும் பெண் எதிர்கொள்ளும் பாலியல் மனநிலையை ஔவையார் ஒரு பாடலில் நுணுக்கமாக விவரித்துள்ளார். அதன் அர்த்தத்தை இங்கே பார்க்கலாம்.
‘பெண்ணாகிய என்னுடைய மார்புகளுக்கிடையே இன்பத்துடன் படுத்துத் துயில்வதை விடுத்து, கொதிக்கும் வெய்யில் தரக்கூடிய கொடிய பாலை வழியில் பணம் தேடச் செல்கிறானே கணவன்’ என்று வருந்துகிறாள்.
பிரிவு பற்றி யோசிக்கும்போது பாலியல் விழைவு இயற்கையாக இடம்பெறுவது சங்கக் கவிதைகளின் தனித்துவமாகும். சங்கக் கவிதைகளின் சாரம்சத்தில் இருந்து பாலியல் மிகவும் இயல்பான விஷயமாகத் தமிழர்களிடம் இருந்ததை உணர முடிகிறது.
ஆனால் சங்க காலத்துக்குப் பிறகு தமிழரின் வாழ்க்கையில் மதங்கள் ஆதிக்கம் செலுத்தியவுடன் பாலியல் எதிர்மறை அம்சமாகிவிட்டது. உடல் பற்றிய கொண்டாட்டங்கள் புறந்தள்ளப்பட்டன.
உடலை வருத்தித் தவம் இருப்பது, உடலைத் துறப்பதன் மூலம் வீடுபேறு அடைதல் போன்ற கருத்துகள் பாலுறவைக் கேவலமாக ஆக்கிவிட்டன. பாலியல் என்பது குற்றமாக, சிற்றின்பம் என்று குறிப்பிடப்பட்டு புறக்கணிக்கப்பட்டது.
உண்மையில், ஒத்த கருத்துடைய ஆணும் பெண்ணும் சேர்ந்து துய்க்கும் பாலுறவு பெரும்பேறு, பேரின்பம் என்பதுதான் தமிழர்களின் அடிப்படைக் குணமாகும்.
மதங்கள் ஆட்சி செய்யத் தொடங்கிய பின்னர்தான் பெண்களை வெறுமனே பிள்ளை பெற்றுத்தரும் இயந்திரமாக ஆண்கள் மாற்றிவிட்டார்கள். இந்த நிலை மாற வேண்டும்.
ஆம், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த நம் முன்னோர்களிடம் இருந்து பாலியல் ரீதியில் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயம் இதுதான்.
பாலியல் என்பது இயற்கையானது, இயல்பானது என்ற சிந்தனை ஆண்-பெண் அனைவருக்கும் ஏற்பட வேண்டும். அதுதான் வாழ்க்கையை சந்தோஷமாக எதிர்கொண்டு வெற்றிபெறும் வழியாகும்.
தொடரும்.