மருத்துவமனைக்குள் நுழைந்து கத்திக்கு தாக்குதல் நடத்திய நபர்... 10 பேர் உயிரிழப்பு?
08 May,2024
சீனாவில் உள்ள யுனான் மாகாணம், ஜாவோடாங் நகரில் ஜென்ஜியாங் கவுண்டி மக்கள் மருத்துவமனையில் நடந்த கத்திக்குத்து தாக்குதல் சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் இன்றையதினம் (07-05-2024) இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
மருத்துவமனையில் நுழைந்த ஒரு மர்ம நபர், கண்ணில் பட்டவர்களை எல்லாம் கத்தியால் குத்தி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இச்சம்பவத்தின் போது அங்கிருந்த பார்வையாளர்கள், நோயாளிகள் என அனைவரும் உயிரை காப்பாற்றிக்கொள்ள தப்பியோடியுள்ளனர்.
குறித்த தாக்குதலில் 10 பேர் உயிரிழந்திருப்பதாகவும், பலர் காயமடைந்திருப்பதாகவும் சின்ஹுவா செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
தாக்குதல் தொடர்பாக பொலிஸார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையின் முடிவில் விரிவான தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது