பிரித்தானியாவில் வேகமாக பரவும் இருமல்: தாய்மார்களுக்கு எச்சரிக்கை
07 May,2024
பிரித்தானியாவில்(United Kingdom) இளம் சிறார்களுக்கு 100 நாள் இருமல் வேகமாக பரவி வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கக்குவான் இருமல் என்பது சிறார்களை மிகவும் வருத்திவிடும் என்றும், கடந்த சில மாதங்களாக பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் வைத்தியர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
அது மட்டுமன்றி, 3 மாதத்திற்கு உட்பட்ட சிறார்கள் இந்த இருமலால் உயிரிழக்க நேரிடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இருமல் காரணமாக சிறார்கள் மூச்சுவிட முடியாமல் போகும் நெருக்கடி ஏற்படும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
ஜனவரி மாதம் முதல் 8,015 சிறார்கள் 100 நாள் இருமல் பாதிப்புடன் மருத்துவர்களை நாடியுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் தடுப்பூசியால் இந்த நோயை குணப்படுத்த முடியும் என்றும் மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆண்டை விட தற்போது 100 நாள் இருமல் பாதிப்பு எண்ணிக்கை பெருமளவு அதிகரித்துள்ளதை மருத்துவ நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.