கடலுக்கு அடியில் அமைந்திருக்கும் தபால் பெட்டி.. எங்குள்ளது தெரியுமா.?
26 Apr,2024
தகவல் தொடர்பின் முதற்கட்டத்தில் தபால் முறை முதன்மையாக இருந்தது. தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்த இந்த காலக்கட்டத்திலும் தபால் முறைக்கு என்று தனி அங்கீகாரம் இருந்துதான் வருகிறது. உலகின் இன்னும் கடிதத்தை தபால் முறையின் மூலம் அனுப்பதற்கு வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர். இந்த நிகழ்வை இன்னும் சுவாரஸ்யப்படுத்தும் நிகழ்வுகள் அவ்வப்போது நடைபெறுகின்றன.
அப்படி ஒன்றுதான் கடலுக்கு அடியில் அமைக்கப்பட்டு இருக்கும் தபால் பெட்டி. இந்த பெட்டியில் உங்களுடைய கடிதத்தை கடலுக்கு அடியில் நீந்தி சென்றுதான் போடவேண்டும். இந்த தபால் பெட்டி எங்கு அமைந்துள்ளது, இங்கு எப்படி கடிதங்கள் போடப்படுகிறது போன்றவை பற்றி பார்க்கலாம்.
கடலுக்கு அடியில் அமைந்திருக்கும் இந்த தபால் பெட்டி ஜாப்பானின் சுசாமி பே என்ற இடத்தில் உள்ளது. கரையில் இருந்து சுமார் 10 மீட்டர் ஆழத்தில் அமைக்கப்பட்டு இருக்கும் இந்த பெட்டியில், உங்களுடைய கடிதத்தை அடியில் நீந்தி சென்றுதான் போடவேண்டும். இதற்காகவே தண்ணீரால் பாதிக்காத தபால் அட்டைகள் தயாரிக்கப்படுகிறது.
அந்த தபால் அட்டையில், ஆயில் பெயிட் மூலம் நீங்கள் எழுத விரும்புவதை எழுதி போடவேண்டும். இதற்காக பணிப்புரியுபவர்கள் அதனை எடுத்து நீங்கள் குறிப்பிட்ட முகவரிக்கு அனுப்பி வைப்பர்.
2002 ஆம் ஆண்டு இந்த தபால் பெட்டியின் தனித்துவத்தை அங்கீகரிக்கும் வகையில், கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றது. ஒரு நாளுக்கு சுமார் 1000 முதல் 1,500 வரை தபால் அட்டைகள் இந்த பெட்டியில் போடப்படுகிறதாக கூறப்படுகிறது.
சுற்றுலா பயணிகளுக்கு சாகச பயணமாக, இந்த தபால் பெட்டி வரவேற்பை பெற்றது. இந்த தபால் பெட்டியை சார்ந்து, தபால் அட்டை உருவாக்குவது, இதற்கான ஆயில் பெயிட் விற்பனை என வணிக ரீதியாக சிறந்து விளங்குகிறது. நீருக்கு அடியில் இருந்து வரும் தபால் என்பதால் இதற்கான வரவேற்பு அதிகளவில் உள்ளது.