ஒட்டாவாவில் நடந்த கொலை சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட இலங்கை சேர்ந்த பெப்ரியோ டி-சோய்சா ஜாமீன் கோர போவதில்லை என்று அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
கனடாவை உறைய வைத்த சம்பவம்
கனடாவின் ஒட்டாவா மாகாணத்தில் கடந்த வார புதன்கிழமை இரவு நடந்த பயங்கர சம்பவத்தில் இலங்கையர் தர்ஷினி டிலந்திகா ஏகநாயக(Darshani Ekanyake (35)) மற்றும் இவரது நான்கு பிள்ளைகளான இனுக விக்ரமசிங்க (7), அஷ்வினி விக்கிரமசிங்க (4), ரினியானா விக்ரமசிங்க (2), கெல்லி விக்கிரமசிங்க (2 மாதம்) ஆகியோர் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன் இலங்கையில் இருந்து 2 மாதங்களுக்கு முன்பு வந்து, தனுஷ்க விக்கிரமசிங்க குடும்பத்துடன் தங்கியிருந்த மற்றொரு இலங்கையர் அமரகூன் முதங்பியயான்சேல ஜீ காமினி அமரகோன்(Gamini Amarakoon Amarakoon Mudiyanselage, 40) என்பவரும் கொல்லப்பட்டார்.
இந்த தாக்குதல் சம்பவத்தில் தர்ஷினியின் கணவரான தனுஷ்க விக்கிரமசிங்க(Dhanushka Wickramasinghe) அதிர்ஷ்டவசமாக பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இலங்கையை சேர்ந்த 19 வயதான ஃபெப்ரியோ டி ஸோய்சா என்பவரே இந்த கொடூர தாக்குதல் சம்பவத்தை அரங்கேற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜாமீன் கோர போவதில்லை
இந்நிலையில், நடந்த கொலை சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட இலங்கை சேர்ந்த பெப்ரியோ டி-சோய்சா ஜாமீன் கோர போவதில்லை என்று அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவத்திற்கு முன்னதாக இணையதளத்தில் ஃபெப்ரியோ டி ஸோய்சா மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து புதிதாக வெளிப்படுத்தப்பட்ட மின்னஞ்சல்கள், இந்த வழக்கை மேலும் சிக்கலாக்குகிறது.
ஆறு பேர் கொலை மற்றும் ஒரு கொலை முயற்சி வழக்கு ஆகிய ஏழு குற்றச்சாட்டுகளை டி-சோய்சா எதிர்கொள்கிறார்.
ஒரு முக்கிய தடயத்தை கண்டுபிடித்துள்ளதாக விசாரணை அதிகாரிகள் நம்புகின்றனர். ஃபெப்ரியோ டி ஸோய்சாவின் மின்னணுக் கருவிகளில் இருந்து மீட்டெடுக்கப்பட்ட மின்னஞ்சல் தொடர்பு. இந்த மின்னஞ்சல்கள், தாக்குதலுக்கு முந்தைய வாரங்களில் ஒட்டாவா பகுதியில் உள்ள கல்லூரி வளாகங்கள் தொடர்பான தேடல்களைக் காட்டுகின்றன.
இந்த தேடல்களின் உள்ளடக்கம் தற்போது சட்ட அமலாக்க அதிகாரிகளால் பகுப்பாய்வு செய்யப்பட்டு வருகிறது, ஆனால் இவை இலக்குகள் குறித்த தகவல்களை சேகரிப்பதற்கான முயற்சிகளாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. கொலைகளுக்கான உந்துதல் குறித்து அதிகாரிகள் எந்த தகவலையும் வெளியிடவில்லை. இருப்பினும், இந்த மின்னஞ்சல்கள் வெளியிடப்படுவது, டி-சோய்சாவின் செயல்களில் முன்கூட்டிய திட்டமிடல் இருந்ததற்கான சாத்தியத்தை சுட்டிக்காட்டுகிறது.
இந்த வழக்கு சட்ட அமைப்பு முறையின் மூலம் தொடரும் வரை கவனம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.