சுமார் 20 சிதைந்த மனித உடல்களுடன் கண்டுபிடிக்கப்பட்ட படகு,
16 Apr,2024
வடகிழக்கு பிரேசிலின் கடற்பகுதியில் ஒரு படகில் சுமார் 20 சிதைந்த மனித உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த 13 ஆம் திகதி கடற்கரையில் குறித்த படகு கண்டுபிடிக்கப்பட்டதாக பிரேசில் மத்திய வெளியுறவு அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை அறிவித்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அத்தோடு, சடலங்கள் சிதைவடைந்து காணப்படுவதால் படகில் எத்தனை பேர் இறந்தனர் என்பது சரியாகத் தெரியவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், குறித்த நபர்கள் பிரேசிலியர்களாக இருக்க முடியாது என்றும் ஊகிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சடலங்களாக மீட்கப்பட்டவர்கள் பெரும்பாலும் கரீபியன் தீவுகளைச் சேர்ந்தவர்கள் என்று புலனாய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்