சூரிய கிரகணத்தின் போது அதிர்ச்சி , ஏலியன்களின் பறக்கும் தட்டை நேரில் கண்ட மக்கள்!
09 Apr,2024
உலகின் மிக அரிய சூரிய கிரகணம் (Solar Eclipse) நேற்று (8) தென்பட்ட போது, அமெரிக்காவில் (America) உள்ள டெக்ஸஸ் (Texas) மாகாணத்தில், ஏலியன்கள் பறக்கும் தட்டு ஒன்று தென்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக மக்கள் பலர் நேற்றைய தினம் தென்பட்ட சூரிய கிரகணத்தை பிரத்தியேக தொலைநோக்கி மூலகமாக கண்டுகளித்தனர்.
இந்த நிலையில், டெக்ஸஸ் மாகாணத்தில் சூரிய கிரகணத்தின் போது ஏலியன்கள் பறக்கும் தட்டு ஒன்று பறந்தமை தொடர்பான காணொளி தற்போது சமூக வலையத்தளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.
மர்ம பொருள்
மேகக்கூட்டங்களுக்கு நடுவே வட்ட வடிவ மர்ம பொருளொன்று சூரிய கிரகணத்தின் போது, அதிக வேகத்திலும் கண்ணிமைக்கும் நொடியிலும் பறந்து சென்றது.
ஏற்கனவே அமெரிக்காவில் ஏலியன்கள் நடமாட்டம் இருப்பதாக பல ஆண்டுகளாக நம்பப்பட்டு வரும் நிலையிலும், பல்கெரிய ஜோதிடர் என அழைக்கப்படும் மறைந்த பாபா வாங்கவின் கணிப்புப்படி ஏலியன்கள் நடமாட்டம் இந்த வாண்டு மக்கள் மத்தியில் அரங்கேறும் என கூறப்பட்டுள்ள நிலையிலும், இந்த சம்பவம் ஏற்பட்டுள்ளமை தற்போது மக்கள் மத்தியில் பேசுபொருளாகியுள்ளது