பாம்பினால் பாலை ஜீரணிக்க முடியாது உண்மையில் பலருக்கும் தெரியாத தகவல்
07 Apr,2024
பெரும்பாலான படங்களில் பாம்பு பால் குடிப்பது போன்று காட்சிப்படுத்திருப்பர். உண்மையின் பாம்பு பால் குடிக்குமா என்ற சந்தேகம் நமக்கு இருக்கும். அதற்கான விடையை இந்த பதிவில் பார்க்கலாம்.
ஊர்வன வகையைச் சேர்ந்த ஒரு உயிரினம்தான் பாம்பு. பாம்பு இனத்தில் பல்வேறு வகைகள் இருக்கின்றன. நீளமான முதுகெலும்பும், தலை பகுதியை மட்டும் கொண்டவை பாம்புகள்.
இவை நாவில் அதீத விஷத்தன்மை கொண்டது. இரையை கொன்று சாப்பிடவும், தற்காத்துகொள்ளவும் அவை அதற்கு பயன்படுகிறது.
பாம்புகள் மாமிச உண்ணி. அவை எலி, தவளைகள், சிறிய பறவைகள் போன்றவற்றை சாப்பிட்டு வாழும். இந்நிலையில், பெரும்பாலான தமிழ் மற்றும் இதர மொழி சினிமாக்களில் பாம்புகள் பால் குடிப்பதாக காட்சிபடுத்திருப்பர்.
பாம்புகளுக்கு பால் மற்றும் முட்டையை நெய்வேதியமாக கொடுப்பதையும், பாம்பு புற்றுக்குள் பால் ஊற்றுவது போன்ற காட்சிகள் படங்களில் இடம்பெற்று இருக்கும்.
மத ரீதியான நம்பிக்கைகள் ஒருபக்கம் இருப்பினும், பாம்புகள் உண்மையில் பால் குடிக்குமா? என்பதைப் பற்றி தெரிந்துகொள்ளலாம்.
பாம்புகள் பால் குடிக்காது என்பது உண்மை. பாம்புகளினால் பால் அல்லது இதர பால் சார்ந்த உணவுகளை ஜீரணிக்க முடியாது. ஆனால் பாம்புகள் தண்ணீர் குடிக்கும். நெடுநாட்களாக பாம்பிற்கு தண்ணீர் கொடுக்காமல் வைத்திருந்தால், நீரிழப்பு ஏற்படுக்கிறது.
இதன்காரணமாகவே, பாலை பார்த்ததும் தாகத்தில் பாம்பு பால் குடிக்கும்.
ஆனால், உண்மையில் பாம்புகள் பாலை குடிப்பது இல்லை. பாலை பாம்பினால் ஜீரணிக்க முடியாத நிலையில், அது சில நேரங்களில் அதன் உயிருக்குகே ஆபத்தாக முடியவும் வாய்ப்புள்ளது.
அதேபோல், சில வகை பாம்புகள் வேட்டையின்போது பறவைகளில் முட்டைகளை சாப்பிடுகின்றன.