புதுச்சேரியில் மாயமான சிறுமி சடலமாக மீட்பு..! உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை..!
05 Mar,2024
!
புதுச்சேரியில் மாயமான சிறுமி சாக்கடையில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
புதுச்சேரி சோலை நகரை சேர்ந்தவர் நாராயணன், இவரது மனைவி மைதிலி. இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ள நிலையில் இரண்டாவது மகளான ஆர்த்தி (9) அதே பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை ஆர்த்தி அவரது வீட்டருகே விளையாடி கொண்டிருந்தபோது காணாமல் போனார். இது குறித்து பெற்றோர் அளித்த புகாரின் பேரில் சிறுமியை போலீசார் தேடி வந்தனர். சிறுமி கடந்து சென்ற பாதைகளில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை கொண்டு தேடும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் காணாமல் போன சிறுமி, சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். வீட்டின் அருகே உள்ள சாக்கடையில் சிறுமி சடலமாக இருந்ததை கண்டு பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். தகவல் அறிந்து வந்த போலீசார், சிறுமியின் உடலை மீட்டு விசாரித்து வருகின்றனர்.