அமேசான் காடுகளில் கண்டுபிடிக்கப்பட்ட வடக்கு பச்சை அனகோண்டா
22 Feb,2024
விஞ்ஞானி ஃப்ரீக் வோங்க் என்வர் 26 அடி நீளமுள்ள பச்சை அனகோண்டா பாம்பின் வீடியோவை வெளியிட்டுள்ளார்.
அமேசான் காடுகளில் இருந்து இந்த புதிய வகை பச்சை அனகோண்டாவை விஞ்ஞானிகள் குழு கண்டுபிடித்துள்ளது.
உலகின் மிகப்பெரிய பாம்பு என்று நம்பப்படும் அனகோண்டாவின் வீடியோவை வோங்க் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
இந்த பாம்பு கார் டயரைப் போல் தடிமனாகவும், எட்டு மீட்டர் நீளமும், 200 கிலோவுக்கு மேல் எடையும் கொண்டதாகக் கூறப்படுகிறது.
புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட இந்த வகை பாம்பு "வடக்கு பச்சை அனகோண்டா" என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.