நிலாவின் சுற்றளவு குறைகிறது பூமிக்கு ஆபத்து தகவலை வெளியிட்ட அறிவியலாளர்கள்!
29 Jan,2024
சில மில்லியன் ஆண்டுகளாக நிலாவின் சுற்றளவு குறைந்து வருவதை அறிவியலாளர்கள் கண்டு பிடித்துள்ளனர்.
இதன்படி, நிலாவின் சுற்றளவு 150 அடி அளவில் குறைவடைந்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
நிலாவின் சுற்றளவு
பூமியுடன் ஒப்பிடும் போது, நிலாவில் குளிர்ச்சி கடுமையாக காணப்படும்.
இதனால், அதன் சுற்றளவு மெதுவாக குறைந்து கொண்டு வருவதாகவும், எதிர்வரும் காலங்களில் நிலாவின் சுற்றளவு மேலும் குறையும் எனவும் அறிவியலாளர்கள் கூறியுள்ளனர்.
நிலாவில் நிலநடுக்கம்
இந்த நிலை தொடர்ந்தால், நிலாவில் நிலநடுக்கம் ஏற்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலாவில் ஏற்படக்கூடிய நிலநடுக்கம் பூமியை போல் சாதாரணமாக இருக்காது.
அவை சில மணி நேரங்களுக்கு நீடிக்கும் என்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
நிலாவுக்கான பயணம்
இதன் மூலம் பூமியிலிருந்து நிலாவுக்கு செல்பவர்கள் ஆபத்தை சந்திக்க நேரிடலாம்.
நிலாவின் தென் துருவத்தில் அதிக நிலநடுக்கம் ஏற்பட்டு நிலச்சரிவு உண்டாகியுள்ளதாக அறிவியலாளர்கள் அடையாளம் கண்டுள்ளனர்.
இந்த புதிய தகவல்கள் மூலமாக பல்வேறு நாடுகள் அடுத்தடுத்து மேற்கொள்ளக்கூடிய நிலா பயணங்களை, மிகுந்த கவனத்துடன் மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பூமிக்கு ஆபத்து
நிலாவின் சுற்றளவு குறைவதால் பூமிக்கு ஆபத்து ஏதும் ஏற்படாது என தெளிவுபடுத்தியுள்ள விண்வெளி ஆய்வாளர்கள், பூமியிலிருந்து விண் வெளிப்பயணம் மேற்கொள்ளும் நாடுகள் இந்த தகவல்களை கவனத்தில் கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளனர்.