பிலிப்பைன்ஸ் நாட்டில் 9 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை
29 Jan,2024
மணிலா: பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள தபோராக் கிராமத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ் ஆதரவு அமைப்பான தவுலா இஸ்லாமியா தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. அதையடுத்து குறிப்பிட்ட பகுதியை சுற்றிவளைத்த ராணுவம், தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டது. ெதாடர் தேடுதல் வேட்டையில் தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
அதற்கு பதிலடி கொடுத்த பாதுகாப்பு படையினர், என்கவுன்டரில் 9 தீவிரவாதிகளை சுட்டுக் கொன்றனர். முன்னதாக கடந்த டிசம்பர் 3ம் தேதி, தெற்கு மராவி நகரில் உள்ள பல்கலைக்கழகத்தின் உடற்பயிற்சி கூடத்தில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் நான்கு பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர். இந்த தாக்குதலை நடத்திய தீவிரவாத கும்பலுக்கும், தற்போது சுட்டுக் கொல்லப்பட்ட தீவிரவாதிகளுக்கும் தொடர்பு இருப்பதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.