36 பேரை எரித்து கொன்ற வழக்கில் ஜப்பானியருக்கு மரண தண்டனை
26 Jan,2024
டோக்கியோ: ஜப்பானில் 36 பேரை தீவைத்து எரித்து கொன்ற வழக்கில்,ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஜப்பானின் கியோட்டோவின் முன்னணி அனிமேஷன் ஸ்டூடியாவில் கடந்த 2019ல் நடந்த தீ விபத்தில் 36 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் அந்த நாட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.ஷின்ஜி அவோபா என்பவர் அனிமேஷன் ஸ்டூடியோவில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்து கொழுத்தினார்.
வயலட் எவர்கார்டன் மற்றும் தொடர் மற்றும் பிரபலமான படைப்புகளுக்கு பெயர் பெற்ற ஸ்டூடியோவுக்கு எதிராக அயோபா வெறுப்பு கொண்டிருந்தார் என்றும் அவரது நாவலை அந்த நிறுவனம் திருடியது என அவர் கருதினார். இதனால்தான் அவர் இந்த குற்றத்தில் ஈடுபட்டார் என குற்றம்சாட்டப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அவோபாவுக்கு மரண தண்டனை விதித்து நேற்று தீர்ப்பளித்தார்