இந்த வார ராசி பலன் ,ஜனவரி 26, 2024 முதல் பிப்ரவரி 1, 2024 வரை

26 Jan,2024
 

 
 
 ஜனவரி மாதத்தின் நான்காவது வாரத்தில் திருக்கணிதப் பஞ்சாங்கப்படி நவகிரகங்களின் சஞ்சாரத்தைப் பார்த்தால் சூரியன் மகர ராசியில் அமர்ந்திருக்கிறார். செவ்வாய் தனுசு ராசியில் அமர்ந்திருக்கிறார். புதன் தனுசு ராசியில் இருக்கிறார். பிப்ரவரி 1 ஆம் தேதி மகர ராசிக்கு செல்கிறார். மேஷத்தில் குரு சஞ்சரிக்கிறார். சுக்கிரன் தனுசு ராசியில் அமர்ந்திருக்கிறார். கும்பத்தில் சனி... மீனத்தில் ராகு... கன்னியில் கேது... என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன.
 
 இந்த வாரத்தில் வேறு கிரக மாற்றம் இல்லை. சந்திரன் இந்த வாரம் கடகம் சிம்மம் கன்னி துலாம் ஆகிய ராசிகளில் பயணம் செய்கிறார். விருச்சிகம் தனுசு மகரம் கும்பம் ஆகிய ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனம் தேவை. இந்த வாரம் கிரகங்களின் சஞ்சாரம், கூட்டணி, பார்வைகளால் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் யாருக்கு அதிர்ஷ்டம் அதிகரிக்கும், சுப விரையச் செலவுகள் யாருக்கு வரும் என்று பார்க்கலாம். இந்த வாரம் கிரகங்களின் சஞ்சாரம் சூரியன் -
 
 
 மகர ராசி செவ்வாய் - தனுசு ராசி புதன் - தனுசு-மகர ராசி குரு - மேஷ ராசி சுக்கிரன் - தனுசு ராசி சனி -கும்ப ராசி ராகு - மீன ராசி கேது - கன்னி ராசி
 
மேஷம் 
 
வீரத்தை அணிகலனாகக் கொண்ட செவ்வாயை அதிபதியாகப் பெற்றுள்ள மேஷ ராசி அன்பர்களே... நவக்கிரக நாயகர்களின் முதல்வரான சூரியன் உங்கள் ராசிக்கு 10 ஆம் இடத்தில் இருக்கிறார். தூரதேசப் பயணங்களின் மூலம் உங்களுக்கு நன்மை உண்டாகும். செலவுகள் அதிகரித்து பணப் பற்றாக்குறை ஏற்படும். அதே நேரத்தில் எப்படியாவது பண வரவு இருக்கும். சந்திரனின் நகர்வு மிக சாதகமாக இருக்கின்றது. வியாபாரம் விருத்தி அடையும். செவ்வாய் 9 ஆம் இடத்தில் அமர்ந்திருக்கிறார். அரசாங்க வேலைகளில் எச்சரிக்கையாக இருங்கள். காரியத் தடைகள் ஏற்பட்டாலும் கவலைப்பட வேண்டாம். புதன் 9,10 ஆம் வீட்டில் இருக்கிறார். சுப காரியங்கள் நடக்கும். வெளியூர்ப் பயணங்களால் பணம் வரவு ஏற்படும். தெய்வ வழிபாட்டின் மூலம் நன்மை உண்டாகும். குரு பகவான் 1 ஆம் வீட்டில் இருக்கிறார். மங்கல காரியங்களுக்கான செலவுகளைச் செய்வீர்கள். ஆன்லைன் வர்த்தகங்கள் மூலம் பண இழப்பு அடைவீர்கள். கணவன் மனைவி உறவு மேம்படும். சனி பகவான் 11 ஆம் வீட்டில் இருக்கிறார். தொழிலில் எதிர்பாராத லாபம் கிடைக்கும். பணத்தட்டுப்பாடு பெருமளவில் குறையும். குடும்பத்தினர் பற்றிய கவலை நீங்கும். ராகு பகவான் 12 ஆம் இடத்தில் இருக்கிறார். வீண் கெட்ட பெயர் வராமல் பார்த்துக் கொள்ளுங்கள். துக்ககரமான நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்படும். கேது பகவான் 6 ஆம் இடத்தில் இருக்கிறார். தொழிலில் மந்த நிலை ஏற்படும். நெருங்கிய நண்பர்கள் உதவி செய்வார்கள். புதிய நண்பர்களிடம் எச்சரிக்கை தேவை.
 
 ரிஷபம் 
 
கலைநயம் மிளிரும் சுக்கிரனை அதிபதியாகக் கொண்ட ரிஷபராசி அன்பர்களே.... சூரிய பகவான் உங்கள் ராசிக்கு 9 ஆம் இடத்தில் இருக்கிறார். ஏதோ ஒரு காரணத்தால் பாதிக்கப்பட்ட மனநிம்மதி மீண்டும் கிடைக்கும். உறவினரிடத்தில் இருந்த மனத்தாங்கல் நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவார்கள். சந்திரனின் சஞ்சாரங்கள் இந்த வாரத்தில் அனுகூலமான பலன்களையே தரும். செவ்வாய் 8 ஆம் இடத்தில் இருக்கிறார். தொழிலுக்கு போட்டியாக விரோதிகள் தோன்றுவார்கள். குடும்பத்தில் குழப்ப நிலை நிலவும். கவலையால் உடல் நலம் பாதிக்கப்படும். புதன் 8,9 ஆம் வீட்டில் இருக்கிறார். பெண்களால் பணம் வரவு உண்டாகும். பெற்றோர்கள் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குரு பகவான் 12ஆம் வீட்டில் இருக்கிறார். தொழிலுக்கு விரோதமாக நடந்து கொண்டவர்கள் நண்பர்களாக மாறுவார்கள். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். ஊக்கத்துடன் தொழிலை நடத்துவீர்கள். சனிபகவான் 10 ஆம் வீட்டில் இருக்கிறார். நில விற்பனை மூலம் லாபம் பெறுவீர்கள். புதிய வீடு கட்டுவதற்கான ஏற்பாடுகளை செய்வீர்கள். ராகு 11 ஆம் வீட்டில் இருக்கிறார். பிள்ளைகளால் மகிழ்ச்சியான மனநிலைக்கு மாறுவீர்கள். புதிய வீடு மாறுவதற்கான வாய்ப்பு ஏற்படும். கணவன் மனைவி உறவு மகிழ்ச்சியாக இருக்கும். கேது 5 ஆம் வீட்டில் இருக்கிறார். அசாத்திய துணிவோடு தொழிலை நடத்துவீர்கள். வேண்டாத விரோதிகள் பணிந்து போவார்கள். செல்வாக்கு அதிகரிக்கும். மிதுனம் எதிர்ப்புகளை புத்திசாலித்தனத்தால் முறியடிக்கும் புதனை அதிபதியாகக் கொண்ட 
 
மிதுன ராசி அன்பர்களே... 
 
சூரிய பகவான் 8 ஆம் இடத்தில் அமர்ந்திருக்கிறார். நண்பர்களுக்காக தேவையில்லாமல் செலவு செய்யாதீர்கள். அநாவசிய கோபத்தின் மூலம் விரோதம் அதிகரிக்கும். மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள். கடன் தொல்லை அதிகரிக்கும். சந்திரனின் நகர்வு ஏற்ற இறக்கமான பலன்களையே தரும். செவ்வாய் 7 ஆம் வீட்டில் இருக்கிறார். மனைவி பிள்ளைகளால் மனக்கவலை அடைவீர்கள். கட்டுமானத் தொழில் சிறப்பாக நடைபெறும். பந்தயங்களில் வெற்றி பெறுவீர்கள். புதன் 7,8 ஆம் வீட்டில் இருக்கிறார். வேலை செய்கின்ற இடத்தில் கெட்ட பெயர் வராமல் பார்த்துக் கொள்ளுங்கள். சிலருக்கு பெண்களால் பணச் செலவு அதிகரிக்கும். குரு பகவான் 11 ஆம் வீட்டில் இருக்கிறார். எதிர்பார்த்த முன்னேற்றமும் பண வரவும் ஏற்படும். வேலை இடத்தில் கவனமாக இருங்கள். உத்தியோகத்தில் இடமாறுதல் உண்டாகலாம். சனிபகவான் 9 ஆம் இடத்தில் இருக்கிறார். புதிய முதலீடுகள் செய்ய வேண்டாம். கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் எச்சரிக்கையாக இருங்கள். மனைவி மக்களின் ஆதரவு மனதிற்கு நிம்மதியைத் தரும். ராகு 10ஆம் இடத்தில் இருக்கிறார். நினைத்த காரியங்களை நிறைவேற்றி வைப்பார். வாழ்க்கையில் ஒரு மாற்றத்தைச் சந்திப்பீர்கள். கேது 4 ஆம் வீட்டில் இருக்கிறார். பெரிய மனிதர்கள் சந்திப்பு உற்சாகத்தைத் தரும். சொத்து நிலம் சம்பந்தமாக வழக்குகளைச் சந்திக்க நேரிடும். 
 
 
கடகம்
 
 வளர்ச்சிகளை சீராக அள்ளித் தருகின்ற சந்திரனை அதிபதியாகக் கொண்ட கடக ராசி அன்பர்களே... சூரிய பகவான் உங்கள் ராசிக்கு 7 ஆம் வீட்டில் இருக்கிறார். உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். உறவுகளைப் பேணுவதில் அக்கறை காட்டுங்கள். தேவையில்லாத விரோதங்கள் உண்டாகலாம். சந்திரனின் இடமாற்றங்கள் தொழிலில் ஏற்ற இறக்கமான பலன்களையே தரும். செவ்வாய் 6 ஆம் இடத்தில் இருக்கிறார். நண்பர்கள் தக்க சமயத்தில் உதவி செய்வார்கள். மகிழ்ச்சிகரமான சம்பவங்கள் குடும்பத்தில் நடக்கும். விரோதிகளின் எதிர்ப்பு நடவடிக்கைகள் விலகும். புதன் 6,7 ஆம் வீட்டில் இருக்கிறார். கொடுக்கல் வாங்கலில் எச்சரிக்கையாக இருங்கள். மேலதிகாரிகளின் அனுசரணையான போக்கு உங்களுக்கு ஆதரவாக இருக்கும். குரு பகவான் 10 ஆம் வீட்டில் இருக்கிறார். தொழில் ஏற்றமான பலன்களைக் காண்பீர்கள். பிரயாணங்கள் மூலமாக ஆதாயம் அடைவீர்கள். குடும்பத்தில் புதிய ஜீவன் உருவாகும். சனி பகவான் 8 ஆம் வீட்டில் இருக்கிறார். வெளியிடங்களில் பெண்களிடம் எச்சரிக்கையாக இருங்கள். ராகு பத்தாம் வீட்டில் இருக்கிறார். பிரபலமான மனிதர்களின் சந்திப்பு தொழிலை முன்னேற்றமடைய செய்யும். சுக்கிரன் 6 ஆம் வீட்டில் அமர்ந்திருக்கிறார். துணிவுடன் காரியங்களில் இறங்கினால் வெற்றியைச் சந்திப்பீர்கள். ராகு ஒன்பதாம் வீட்டில் இருக்கிறார். வெளியூர் பயணங்களால் அலைச்சல் அதிகமாகும்.கேது 3 ஆம் வீட்டில் இருக்கிறார். தொழிலுக்கு இடையூறு செய்த எதிரிகளை வெற்றி கொள்வீர்கள். சிம்மம் அரசரைப் போல் கோலோச்சும் ஆற்றல்மிக்க சூரியனை அதிபதியாகக் கொண்ட
 
 சிம்ம ராசி அன்பர்களே..
 
. உங்கள் ராசிநாதன் 6 ஆம் ஆமிடத்தில் இருக்கிறார். பணத்தட்டுப்பாடு காரணமாக தடுமாற்றம் அடைவீர்கள். குடும்பத்தில் ஒருவருக்கு மருத்துவச் செலவு செய்ய வேண்டி வரும். சந்திரனின் சஞ்சாரங்கள் தொழிலுக்கு ஏற்றத்தைக் கொடுக்கும். செவ்வாய் 5 ஆம் வீட்டில் இருக்கிறார். அக்கறையோடு தங்க நகைகள் வாங்குவீர்கள். மனைவி மக்களால் மகிழ்ச்சி உண்டாகும். புதன் 5,6 ஆம் இடத்தில் இருக்கிறார். எதிர்ப்பைக் காட்டியவர்கள் உரிய நேரத்தில் உதவி செய்வார்கள். கடன் தொல்லைகள் நீங்கும். பண வரவு அதிகரிக்கும். குரு 9 ஆம் வீட்டில் இருக்கிறார். எதிரிகள் கூட நண்பர்களாக மாறி உதவி செய்வார்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்வீர்கள். சனி பகவான் 7 ஆம் வீட்டில் இருக்கிறார். ஏற்றுமதி இறக்குமதி தொழில் சிறப்பாக நடக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு பேச்சுவார்த்தையில் பின்னடைவு உண்டாகும். ராகு 8 ஆம் இடத்தில் இருக்கிறார். வீண் அலைச்சலும் பணச் செலவும் உண்டாகும். வேலை இடத்தில் பழிச் சொல்லுக்கு ஆளாகாமல் பார்த்துக் கொள்ளுங்கள். சுக்கிரன் 5 ஆம் வீட்டில் இருக்கிறார். வெளியூரில் இருந்து நல்ல செய்தி கிடைக்கும். வியாபாரம் எதிர்பாராத லாபத்தை கொடுக்கும். கேது 2 ஆம் இடத்தில் இருக்கிறார். தேவையில்லாமல் பேசி சிக்கலில் மாட்டிக் கொள்வீர்கள். வீட்டுச் செலவுக்கு கடன் வாங்குவீர்கள். கன்னி அறிவுத் திறனை அள்ளித்தரும் புதனை அதிபதியாகக் கொண்ட கன்னி ராசி அன்பர்களே... சூரியன் 5 ஆம் இடத்தில் இருக்கிறார். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். எதிர்பார்த்த இடங்களில் இருந்து உதவி கிடைக்க தாமதமாகும். புது நண்பர்களால் உங்கள் தொழிலுக்குத் தேவையான நன்மை உண்டாகும். செவ்வாய் 4 ஆம் இடத்தில் இருக்கிறார். தன்னைவிட தாழ்ந்த ஒருவரிடம் கீழ்ப்படிந்து நடக்க நேரிடும். உங்களுக்கு எதிரானவர்களின் பலம் கூடும். மன சஞ்சலம் அதிகமாகி தூக்கம் கெடும். புதன் 4,5 ஆம் இடத்தில் இருக்கிறார். உத்தியோகம் பார்க்கும் இடத்தில் உயர்வு உண்டாகும். குடும்பத்தில் சுப காரியம் நடக்கும். குரு பகவான் 8 ஆம் இடத்தில் இருக்கிறார். அரசாங்க வேலைகள் இழுபறியாக நடக்கும். தொழிலில் சுமாரான ஆதாயம் கிடைக்கும். சுக்கிரன் 4 ஆம் இடத்தில் இருக்கிறார். பிடிவாதமான போக்கை கைவிடுங்கள். உங்களுக்கு எதிர்பாராத நன்மை வந்து சேரும். சந்தர்ப்பத்திற்கு தகுந்த மாதிரி நடிக்கும் எதிரிகளை அடையாளம் காணுவீர்கள். சனி பகவான் 6 ஆம் இடத்தில் இருக்கிறார். மேலதிகாரிகளின் மனதிற்கு பிடித்த மாதிரி நடந்து கொள்வீர்கள். குடும்பத்தில் சிறு சிறு தகராறுகள் தோன்றி மறையும். ராகு 7 ஆம் இடத்தில் இருக்கிறார். தீயவர்கள் நட்பை கைவிடுங்கள். பணம் விரயமும் வீணலைச்சலும் உண்டாகும். கேது 1 ஆம் வீட்டில் இருக்கிறார். அனாவசிய செலவு அதிகரிக்கும். பணத்தட்டுப்பாடு உண்டாகும்.
 
 துலாம் 
 
தர்ம அதர்மங்களுக்கு ஏற்ப பலன்தரும் சுக்கிரனை அதிபதியாகக் கொண்ட துலாம் ராசி அன்பர்களே... உங்கள் ராசிக்கு 4 ஆம் இடத்தில் சூரியன் இருக்கிறார். காரியத் தடைகள் உண்டாகும். மறைமுக எதிர்ப்புகளை முறியடிக்க வேண்டிய நிலை ஏற்படும். சந்திரன் சஞ்சாரங்களும் அவ்வளவு சாதகமாக இல்லை. செவ்வாய் 3 ஆம் இடத்தில் இருக்கிறார். நண்பர்களும் விரோதியாக மாறுவார்கள். தேவையில்லாத அலைச்சலால் பொருள் செலவு உண்டாகும். வியாபாரம் மந்தமாக நடக்கும். புதன் 3,4 ஆம் வீட்டில் இருக்கிறார். உறவினர்களின் ஆதரவு இருக்காது. உறவைப் பேணுவதில் கவனமாக இருங்கள். ஏமாற்றங்களும் பொருள் இழப்பும் ஏற்படலாம். குரு பகவான் 6 ஆம் இடத்தில் இருக்கிறார். மனக்கவலைக்கு மருந்து தேடுவீர்கள். தொழில் காரணமாக குடும்பத்தை விட்டு பிரிந்து செல்வீர்கள். சுக்கிரன் 3 ஆம் வீட்டில் இருக்கிறார். வெளிவட்டாரச் செல்வாக்கு அதிகரிக்கும். வெளிநாட்டிலிருந்து நல்ல செய்தி கிடைக்கும். சனி பகவான் 5 ஆம் வீட்டில் இருக்கிறார். ஆன்லைன் சூதாட்டங்களில் ஈடுபடாதீர்கள். மகிழ்ச்சியும் வருத்தமும் கலந்த நிகழ்ச்சிகள் நடைபெறும். ராகு 6 ஆம் இடத்தில் இருக்கிறார். பிள்ளைகள் பற்றிய கவலை அதிகரிக்கும். மேலதிகாரிகளை அனுசரித்துச் செல்ல வேண்டும். கேது பன்னிரண்டாம் வீட்டில் அமர்ந்திருக்கிறார். சிறு விபத்துகள் ஏற்படலாம். குடும்பத்தில் சச்சரவுகள் தோன்றும். 
 
 
விருச்சிகம்
 
 போர்க்குணம் கொண்ட பூமிகாரகனான செவ்வாயை அதிபதியாகக் கொண்ட விருச்சிக ராசி அன்பர்களே... சூரியன் 3 ஆம் வீட்டில் இருக்கிறார். சகோதரனின் உடல்நிலை பாதிக்கப்படலாம். அனாவசியமான அலைச்சலால் மன நிம்மதி கெடும். சந்திர பகவான் தொழிலுக்கு உதவியாக இருப்பார். செவ்வாய் 2 ஆம் இடத்தில் இருக்கிறார். புதிய வாகனங்கள் வாங்குவீர்கள். ஆடை ஆபரண பிராப்தி உண்டாகும். புதன் 2,3 ஆம் இடத்தில் இருக்கிறார். ஏக்கத்தோடு இருந்தவர்களுக்கு மக்கள் பேறு உண்டாகும். தடைபட்ட காரியங்கள் கைகூடிவரும். பந்தயங்களில் அமோக வெற்றி கிடைக்கும். குரு 6 ஆம் வீட்டில் இருக்கிறார். தள்ளிப்போன திருமணம் ஏற்பாடுகள் கைகூடிவரும். பொருளாதாரத்தில் அபிவிருத்தி உண்டாகும். வெளியூர் பயணங்கள் நல்ல பலனைக் கொடுக்கும். சுக்கிரன் 2 ஆம் வீட்டில் அமர்ந்திருக்கிறார். நம்பிக்கையுடன் செய்த காரியத்தில் வெற்றி உண்டாகும். சனி 4 ஆம் வீட்டில் இருக்கிறார். விரோதிகள் வீண் தொல்லைக்கு ஆளாவீர்கள். வியாபாரம் வெற்றிகரமாக நடக்கும். ராகு 5 ஆம் இடத்தில் இருக்கிறார். ஆடல் பாடல் போன்ற கேளிக்கை நிகழ்சிகளில் மனம் ஈடுபடும். கேது 11 ஆம் இடத்தில் இருக்கிறார். உறவினர்களால் பணச் செலவு அதிகரிக்கும். வழக்குகள் தொல்லையைக் கொடுக்கும். 26 ஆம் தேதி சந்திராஷ்டமம். கவனமாக காரியமாற்றுங்கள். 
 
தனுசு 
 
வினைப்பயனை அறுக்கின்ற வியாழ பகவானை அதிபதியாகக் கொண்ட தனுசு ராசி அன்பர்களே... சூரியன் 2 ஆம் இடத்தில் அமர்ந்து இருக்கிறார். பணத்தட்டுப்பாடு வராமல் பார்த்துக் கொள்ளுங்கள். வெளியூர்ப் பயணங்களை சில நாட்கள் விலக்குவது நல்லது. சந்திரன் தொழிலுக்கு நன்மையைத் தருவார். வசீகரமான பேச்சால் வாடிக்கையாளர்களைப் பெருக்குவீர்கள். செவ்வாய் 1 ஆம் இடத்தில் இருக்கிறார். எதிர்பாராத வகையில் வருந்தத்தக்க நிகழ்ச்சிகள் நடக்கலாம். குடும்பத்தில் பிடிவாதத்தைக் காட்டாதீர்கள். புதன் 1,2 ஆம் இடத்தில் இருக்கிறார். துணிந்து எந்தக் காரியமும் செய்வீர்கள். காதலில் வெற்றி ஏற்படும். லாட்டரி பந்தயங்கள் சாதகமாக இருக்காது. குரு பகவான் 5 ஆம் இடத்தில் இருக்கிறார். மனம் அலைபாய்ந்து கொண்டிருக்கும். மேலதிகாரிகள் அனுசரணையாக நடப்பார்கள். மருத்துவச் செலவு கை மீறிப் போகும். சுக்கிரன் 1 ஆம் இடத்தில் இருக்கிறார். சுயநலமாக எந்தக் காரியமும் செய்யாதீர்கள். தேடி வரும் வாய்ப்பை கை நழுவ விடாதீர்கள். சனி பகவான் 3 ஆம் வீட்டில் இருக்கிறார். வீண் மனக்கவலைகள் அகலும். சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கும். பங்குச்சந்தைகள் ஏற்றமாக இருக்கும். ராகு 4 ஆம் இடத்தில் இருக்கிறார். வழக்குகளில் உங்களுக்குச் சாதகமாக தீர்ப்பு வரும். கணவன் மனைவி உறவு இணக்கமாக இருக்காது. கேது 10 இடத்தில் இருக்கிறார். அரசாங்கத்தில் புகழும் நன்மையும் உண்டாகும். குடும்பத்தில் புதிய ஜீவன் உருவாகும். 27,28 ஆம் தேதிகளில் சந்திராஷ்டமம். எச்சரிக்கையோடு செயல்படுங்கள். 
 
மகரம்
 
 வியூகங்கள் மூலம் வெற்றிகளைக் காணும் மந்தனின் ஆதிக்கம் கொண்ட மகர ராசி அன்பர்களே.... சூரியன் 1 ஆம் வீட்டில் இருக்கிறார். சகோதர சகோதரிகளால் பண விரயம் ஏற்படும். உங்கள் வார்த்தையைக் குடும்பத்தில் உள்ளவர்கள் புரிந்து கொள்ள மாட்டார்கள். வீண் வம்புகள் ஏற்படாமல் எச்சரிக்கையாக இருங்கள். செவ்வாய் 12 ஆம் இடத்தில் இருக்கிறார். வேலை இடத்தில் அவ்வளவு உற்சாகம் இருக்காது. உங்களுக்கு எதிராக விரோதிகள் சுறுசுறுப்பாக இயங்குவார்கள். குரு பகவான் 4 ஆம் வீட்டில் இருக்கிறார் வியாபாரம் விறுவிறுப்பாக நடக்கும். பணத்தட்டுப்பாடு நீங்க மகிழ்ச்சி அடைவீர்கள். சுக்கிரன் 12 ஆம் இடத்தில் இருக்கிறார். எதிர்பாராத வகையில் நண்பர்களிடம் விரோதம் ஏற்படும் நிலை உருவாகும். மனக்கவலை அதிகரித்து உடல் சோர்வு அடைவீர்கள். அவசரப்பட்டு எந்தக் காரியத்திலும் இறங்காதீர்கள். சனி பகவான் 2 ஆம் வீட்டில் அமர்ந்திருக்கிறார். பண செலவும் பொருள் இழப்பும் உண்டாகும். ராகு 3 ஆம் வீட்டில் இருக்கிறார். பணம் கையில் தாங்காது. புது மனிதர்களின் சந்திப்புக் கிடைக்கும். கேது 9 ஆம் வீட்டில் இருக்கிறார். குடும்பத்துடன் ஆலய தரிசனம் செய்வீர்கள். எதிர்காலத்திற்காக பணத்தைச் சேமிப்பீர்கள். உறவினர்கள், நண்பர்கள், பிள்ளைகள் உதவியாக இருப்பார்கள். 29,30 ஆம் தேதிகளில் சந்திராஷ்டமம். நிதானமாக நடந்து கொள்ளுங்கள கும்பம் சாணக்கியத்தனத்தால் சாதனை புரியும் சனிபகவானை அதிபதியாகக் கொண்ட
 
கும்ப ராசி அன்பர்களே..
 
. சூரியன் 12 ஆம் வீட்டில் அமர்ந்திருக்கிறார். இந்தக் காலகட்டத்தில் நண்பர்களின் உதவி கிடைக்கும். விரோதமாக இருந்தவர்களும் நட்புப் பாராட்டி நல்ல காரியங்கள் செய்வார்கள். பொருள் சேர்க்கை உண்டாகி மன நிம்மதி அடைவீர்கள். செவ்வாய் 11 ஆம் வீட்டில் இருக்கிறார். வெளியூர் பயணங்கள் வெற்றிகரமாக அமையும். புதிய ஆதரவு பெற்று வியாபாரத்தைப் பெருக்குவீர்கள். இல்லத்திலும் வெளியிலும் மகிழ்ச்சிகரமான சம்பவங்கள் நடக்கும். புதன் 11,12 ஆம் வீட்டில் இருக்கிறார். அந்நியப் பெண்கள் விஷயத்தில் எச்சரிக்கை தேவை. குரு பகவான் 3 ஆம் இடத்தில் இருக்கிறார். விரோதிகளின் சூழ்ச்சிகள் மாயமாக மறைந்து போகும். பதவி உயர்வு உண்டாகும். சுக்கிரன் 11 ஆம் வீட்டில் இருக்கிறார். பிறர் தயவை நாட வேண்டிய அவசியம் இருக்காது. இயலாதவர்களுக்கு உதவி செய்யும் சந்தர்ப்பம் அமையும். கடவுள் பக்தி அதிகரித்து ஆலய வழிபாடு செய்வீர்கள். உறவினர்களால் நன்மை உண்டாகும். சனிபகவான் 1 ஆம் இடத்தில் இருக்கிறார். வாகனங்களில் செல்லும்போது பொறுமையும் நிதானமும் முக்கியம். ராகு 2 ஆம் வீட்டில் இருக்கிறார். பணத்தட்டுப்பாடு உங்களைத் தடுமாற வைக்கும். வீண் அலைச்சலால் கவலை உண்டாகும். கேது 8 ஆம் இடத்தில் இருக்கிறார். எதிர்பாராத வகையில் பூர்வீக சொத்தில் வில்லங்கத்தை சந்திப்பீர்கள். 31,1 ஆம் தேதிகளில் சந்திராஷ்டமம். விழிப்போடு செயலாற்றுங்கள். 
 
மீனம் 
 
பார்வையால் பலன்களை அள்ளித்தரும் குரு பகவானை அதிபதியாகக் கொண்ட மீனராசி அன்பர்களே.... சூரிய பகவான் உங்கள் ராசிக்கு 11 ஆம் வீட்டில் அமர்ந்திருக்கிறார். அரசாங்கக் காரியங்களில் அனுகூலமான பலன்களை பெறுவீர்கள். புதிய தொழில் தொடங்க மேல் முயற்சி மேற்கொள்வீர்கள். அரசியல்வாதிகள் செல்வாக்கை அதிகரித்துக் கொள்வீர்கள். செவ்வாய் 10 ஆம் இடத்தில் இருக்கிறார். அலுவல் சுமை அதிகரித்தாலும் அதற்கான பலனை பெறுவீர்கள். ஆன்லைன் சூதாட்டம் ஆகியவற்றில் வெற்றி காண்பீர்கள். புதன் 10,11 ஆம் வீட்டில் இருக்கிறார். வேலை செய்யும் இடத்தில் பாராட்டுக் கிடைக்கும். மறைமுக எதிர்ப்புகள் மறைந்து போகும். வியாபாரத்தில் ஏற்றமான லாபம் கிடைக்கும். குரு பகவான் 2 ஆம் வீட்டில் அமர்ந்திருக்கிறார். உடல் ஆரோக்கியத்தில் மேம்பாடு காண்பீர்கள். மனைவி மக்களால் மகிழ்ச்சி அடைவீர்கள். சுக்கிரன் 6- ஆம் இடத்தில் இருக்கிறார். உரிய காலத்தில் நண்பர்கள் உதவி செய்வார்கள். வீட்டில் மங்கல நிகழ்ச்சி நடக்கும். நிலம் வீடு வாங்க சந்தர்ப்பம் ஏற்படும். சனி பகவான் 12 ஆம் இடத்தில் இருக்கிறார். அரசு வேலையில் சிக்கல்கள் உண்டாகும். தேவையில்லாத பண விரயம் ஏற்படும். ராகு 1 ஆம் இடத்தில் இருக்கிறார். நல்ல காரியங்களைச் செய்து கெட்ட பெயரை சம்பாதிப்பீர்கள். கேது 7 ஆம் இடத்தில் இருக்கிறார். மனைவியின் உறவினர் வகையில் விரோதம் உண்டாகலாம்.
 



Share this:

Danmark to colombo

india

india

india

danmark

india

india

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

Hajj Packages 2020

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies