அயோத்தி கோயிலில் நிகழ்ந்த அதிசயம்!
24 Jan,2024
அயோத்தியில் நேற்று குடமுழுக்கு விழா நடைபெற்றுக்கொண்டிருக்கும் போது ஒரு அதிசய நிகழ்வு நிகழ்ந்துள்ளது. இது தொடர்பான ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகியும் வருகிறது. அயோத்தில் உள்ள ராமர் கோவிலில் நேற்று மதியம் 12.30 மணி அளவில் ராமர் சிலை பிரதிஷ்டை செய்யும் நிகழ்வு கோலாகலமாக நடைபெற்றது.
இந்நிகழ்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் மிகப் பிரம்மாண்டமாக செய்யப்பட்டிருந்தது.
வியாழக்கிழமை மதியம் 1.28 மணியளவில், 51 அங்குலம் ராமர் சிலை கோவிலின் கருவறையில் வைக்கப்பட்டது.
நேற்று ராமர் அவதரித்த நேரமான அபிஜித் முகூர்த்த வேளையில், சூரியன் உச்சம் பெற்றிருக்கும் நேரத்தில் பிரதிஷ்டை நிகழ்வு நடைபெற்றது.
இந்நிலையில் அயோத்தி கோயிலை கருடன் சுற்றி வந்துள்ளதாக வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
விஷ்ணு பகவானின் வாகனமாக கருடன் விளங்குகிறார். விஷ்ணுவின் அவதாரங்களில் ஒன்றான ராமருக்காக தான் அக்கோயிலும் கட்டப்பட்டுள்ளது.
அப்போது கோயிலின் மேல் பகுதியில் கருடன் வட்டமிட்டுள்ளது.
இதன்மூலம் கடவுளின் ஆசிகிடைத்திருக்கிறது எனவும் கடவுள் ராமர் அங்குதான் இருக்கிறார் என்பதற்கான அறிகுறியாக இது இருக்கிறது என பக்தர்கள் தெரிவித்துள்ளனர்