அமெரிக்காவில் வாலிபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 7 பேர் பலி
23 Jan,2024
“அமெரிக்காவின் சிகாகோ அருகே உள்ள மாநிலத்தில் இரண்டு வீடுகளில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
சிகாகோ அருகில் உள்ள இல்லினாய்ஸ் மாநிலத்தின் ஜோலியட் என்ற பகுதியில் வாலிபர் ஒருவர் இரண்டு வீட்டிற்குள் நுழைந்து துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார்.
இதில் ஏழு பேர் குண்டு பாய்ந்து உயிரிழந்துள்ளனர் என போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.
மேலும் துப்பாக்கிச்சூடு நடத்திய வாலிபர் அடையாளம் காணப்பட்டுள்ளார். 23 வயதான அவருடைய பெயர் ரோமியோ நான்ஸ். சிகப்பு கலர் டொயோட்டா காம்ரி காரில் தப்பியோடிவிட்டார்.
ஆயுதங்களுடன் உள்ள அவர் ஆபத்தானவர் எனவும் எச்சரித்துள்ளார்.நான்ஸ் மற்றும் அவரது கார் குறித்து தகவல் தெரிந்தவர்கள் உடனடியாக போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுக்குமாறு போலீஸ் தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு வன்முறை சம்பவம் அதிகரித்து வருகிறது. இந்த வருடத்தில் முதல் மூன்று வாரங்களில் மட்டும் துப்பாக்கிச்சூடு தொடர்பாக 875 பேர் உயிரிழந்துள்ளனர்.”,