ஜேர்மன் குடியுரிமை பெறுவதை எளிதாக்கும் மசோதா!
20 Jan,2024
ஜேர்மனியில் வாழும் வெளிநாட்டவர்கள் குடியுரிமை பெறும் விடயம் எளிதாக்கப்படுவது மற்றும் இரட்டைக் குடியுரிமை தொடர்பான மசோதா ஜேர்மன் நாடாளுமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. அந்த மசோதாவுக்கு ஆதரவாக 382 நாடாளுமன்ற உறுப்பினர்களும், எதிராக 234 நாடாளுமன்ற உறுப்பினர்களும் வாக்களித்துள்ளனர், 23 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.
ஜேர்மனியில் வாழ்வோர், ஒன்றுக்கும் மேற்பட்ட குடியுரிமை வைத்திருப்பது இனி சாத்தியமாகிவிடும். இதற்கு முன்னிருந்தது போலில்லாமல், ஜேர்மன் குடியுரிமைக்கு விண்ணப்பிக்க, வெளிநாட்டவர் ஒருவர் எட்டு ஆண்டுகள் காத்திருந்ததற்கு பதிலாக, இனி ஐந்து ஆண்டுகள் முடிந்ததுமே அவர்கள் குடியுரிமைக்கு விண்ணப்பிக்கலாம். சில சிறப்பு சூழல்களில், மூன்று ஆண்டுகள் முடிந்ததுமே கூட, குடியுரிமைக்கு விண்ணப்பிக்கவும் வழிவகை செய்யப்படும்.
வெளிநாட்டவர்கள் ஜேர்மனியில் ஐந்து ஆண்டுகள் வாழ்ந்திருந்தால், அவர்களுடைய பிள்ளைகள் தாமாகவே ஜேர்மன் குடியுரிமைக்கு தகுதி பெற்றுவிடுவார்கள்.
இது குறித்து பேசிய ஜேர்மன் சேன்ஸலரான ஓலாஃப் ஷோல்ஸ், புதிய குடியுரிமை சட்டம் நிறைவேற்றப்பட்டுவிட்டதால், சட்டத்துக்கு உடன்பட்டு, பல ஆண்டுகளாக ஜேர்மனியில் வாழ்வோர் மற்றும் பணி செய்வோருக்கு இப்போது ஜேர்மனி சொந்த நாடாகிவிட்டது. நீங்கள் இப்போது ஜேர்மனிக்கு சொந்தம் என்று கூறியுள்ளார்.