செங்கடலில் கப்பல்கள் மீது டிரோன், ஏவுகணை தாக்குதல்
11 Jan,2024
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் தீவிரவாத அமைப்புக்கு இடையே போர் நடந்து வருகின்றது. ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக ஏமனில் உள்ள ஹவுதி படைகள் செயல்பட்டு வருகின்றன. செங்கடல் வழித்தடத்தில் அவ்வப்போது சரக்கு கப்பல்களை குறிவைத்து ஹவுதி படைகள் தாக்குதல் நடத்துகின்றது. வெடிகுண்டு தாங்கிய டிரோன்கள், ஏவுகணைகள், கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகள் மூலமாக ஹவுதி படை தாக்குதலை நடத்தியுள்ளன. இந்நிலையில் 18 டிரோன்கள், 2 ஏவுகணைகள், கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகளை அமெரிக்க படைகள் சுட்டு வீழ்த்தியுள்ளன. நவம்பர் 19ம் தேதிக்கு பின்னர் வர்த்தக கப்பல்கள் மீது நடத்தப்படும் 26வது ஹவுதி தாக்குதல் இதுவாகும்.