சோழர்கள் காலம் to 2024.. இந்திய .மாலத்தீவு ,உறவுகள், இப்போதைய சிக்கல்களும்!

09 Jan,2024
 

 
 
 
 
 
 
இந்தியாவின் இலட்சத்தீவுகளுக்கு தெற்கே அமைந்துள்ள மாலத்தீவு குடியரசு நாடு, தீவுகளாலான ஒரு தீவு நாடாகும். நிலபரப்பு அளவிலும்,மக்கள் தொகை அளவிலும்  தெற்காசியாவில் மிகச் சிறிய நாடாக விளங்கும் இந்நாடு, இந்திய பெருங்கடலில் தவிர்க்க முடியாத சக்தியாக விளங்கி வருகிறது. வெறும், 90,000 ச.கி.மீ. பரப்பளவுள்ள இத்தீவில் 5 லட்சத்துக்கும் குறைவான மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.  மொத்தமுள்ள 1,192 தீவுகளில், சுமார் 200-இல் மட்டும் மனிதக் குடியேற்றங்கள் காணப்படுகிறன. இதர தீவுகளில் விவசாயம் மற்றும் சுற்றுலாத் துறைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகின்றன.
 
 
மாலத்தீவு சராசரி கடல் மட்டத்திற்கு மேல் 1.5 மீட்டர் உயரத்தில் உள்ளது. எனவே, மாலைத்தீவுகள் உலகிலேயே மிகவும் தட்டையான நாடாகும். காலநிலை மாற்றத்தால்,கடல் மட்டம் தொடந்து உயரும் என்று ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இது மாலைத்தீவின் இருப்பை கேள்விக்குள்ளாக்கியிருக்கிறது.
 
உயிர்ப்பான அரசியல் கொண்ட மாலத்தீவு: 
 
வரலாற்று ரீதியாக, சோழர்கள் ஆட்சிக் காலத்தின் கீழ்    நீண்ட காலமாக மாலத்தீவு இருந்தது. இந்தத் தீவுகள் பின்னர் சிங்களர்கள் ஆட்சிக்குட்பட்டன. 1153-ல் இசுலாம் மதம் இங்கு கொண்டுவரப்பட்டது. 16ம் நூற்றாண்டில் இருந்து மாலைத்தீவுகள் போர்த்துக்கேயர், அதன் பின் டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனி, அதன்பின் ஆங்கிலேயர்களின் செல்வாக்கினுள் இருந்தாலும், இஸ்லாத்தின் செல்வாக்கு அங்கு தொடர்ந்து நீடித்துவருகிறது.
 
 
1965-ஆம் ஆண்டு ஆங்கிலேய ஆட்சியில் இருந்து விடுதலை பெற்ற மாலைத்தீவில், மீண்டும் சுல்தான் ஆட்சி முறை கொண்டுவரப்பட்டது. 1968 ஆம் ஆண்டு, சுல்தான் மன்னராட்சி  கலைக்கப்பட்டு குடியரசு நிறுவப்பட்டது. 70களில் சுற்றுலாத் துறையின் மூலம் வலுவான பொருளாதார கட்டமைப்பை உருவாக்கியது.  1978 - 2008 வரை குடியரசுத் தலைவராக இருந்த Maumoon Abdul Gayoom ஆட்சிக் காலம் இந்த வளர்ச்சிக்கு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இருப்பினும், இவரின் ஆட்சியின் பிற்பாதியில், ஜனநாயக சீர்த்திருங்கள் கோரப்பட்டன. அதிகாரவர்க்க எதிர்ப்பியங்கள் உருவாகியின. இதில், முக்கியமானவர் மொகமது நஷீத்  (Mohamed Nasheed). பத்திரிகையாளரான இவர் Gayoom ஆட்சிக் காலத்தின் போது 16 முறை சிறைக்கு அனுப்பப்பட்டார். ஆழமான, அடிப்படை எதார்த்தம் கொண்ட ஜனநாயகத்தை கோரிய இவரது போராட்டம் வெகுசன இயக்கமாக உருவானது. 2003ல் மாலத்தியர் ஜனநாயகக் கட்சியை    (Maldivian Democratic Party) தொடங்கினார். தொடர் போராட்டங்களின் விளைவுகளால், 2008ல் மாலத்தீவின் அரசியலமைப்பு திருத்தம் செய்யப்பட்டது. இந்தியா போன்று பல கட்சி ஜனநாயகமாக உருவானது.
 
 
மொகமது நஷீத்  தலைமையிலான கட்சி  2008ல் ஆட்சியமைத்தது. இருப்பினும், 3 ஆண்டு காலத்தை நிறைவு செய்வதற்கு முன்பே,    2012ல் இந்த ஆட்சி தூக்கி எறியப்பட்டது. 2012ல் Maumoon Abdul Gayoom ஒன்றுவிட்ட சகோதரரான அப்துல் யமீன் ஆட்சி அமைத்தார்.   இந்த காலகட்டத்தின் தான், இந்திய-மாலத்தீவு இருதரப்பு உறவில் தூரம் அதிகரித்து.
 
இந்தியா மாலட்சத்தீவின் அடையாளங்களை கரைத்து விட முயற்சிப்பதாகவும், அதன் இறையாண்மையை ஒடுக்க முயற்சிப்பதாகவும் மாலத்தீவு மக்களிடையே கற்பிதங்கள் கொண்டு வரப்பட்டன.  சீனா, சவுதி அரேபியா ஆகிய நாடுகளிடையே அப்துல் யமீன் தலைமையிலான அரசு நெருக்கம் கொள்ள தொடங்கியது. காமன்வெல்த் அமைப்பில் இருந்து வெளியேறத் தொடங்கியது.
 
 
2018ல் இந்தியாவிற்கு முன்னுரிமை வழங்கும் இப்ராஹிம் முகமது சோலேஅதிபராக பொறுப்பேற்றார். “இந்தியாவிற்கு முதல் முன்னுரிமை” என்பதுதான் தமது அரசின் கொள்கை என்று அவர் மீண்டும் மீண்டும் வலியுறுத்தினார். இந்நிலையில், கடந்த 2023ம் ஆண்டு, மாலத்தீவின் அதிபராக டாக்டர் முகமது முயிசு தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த தேர்தல் பரப்புரையில் , மாலத்தீவில் இருந்து இந்திய ராணுவ அதிகாரிகளை வெளியேற்றுவோம் என்பதே இவரின் முதுலாவது முழக்கமாக இருந்து வந்தது. அதேபோன்று, அதிபராக பொறுப்பேற்ற பின்னர் சீனா, துருக்கி ஆகிய நாடுகளுக்கு தனது முதல் அரசு முறை பயணத்தை மேற்கொண்டார். பொதுவாக, மாலத்தீவு அதிபர்கள் தங்களது முதல் அரசு முறை பயணமாக இந்தியாவுக்கு வருகை வருவது வழக்கம்.
 
 
மாலத்தீவு  ஏன் முக்கியம் பெறுகிறது?
 
இன்றைய பொருளாதாரம் கடல்சார் போக்குவரத்து முக்கிய பங்காற்றுகிறது. குறிப்பாக, இந்திய பெருங்கடல்  வழியே தான்  அரேபிய நாடுகள், ஐரோப்பிய நாடுகள், ஆப்பிரிக்க, ஆசிய நாடுகள் தங்களுக்குள் பண்ட பொருட்களை பரிமாறிக் கொள்கின்றன.  இந்திய பெருங்கடலில், அமைந்துதுள்ள  முக்கிய இரண்டு நீரிணைகளை தக்க வைத்துக் கொள்வதில் மாலத்தீவு முக்கிய பங்காற்றுகிறது. உதாரணமாக, ஓர்முசு நீரிணை  (Straits of Hormuz) உலகில் பயன்படுத்தப்படும் கச்சா எண்ணெயின் 20% கடல் வழியாகவே கொண்டு செல்லப்படுகின்றது. மற்றோன்றான, மலாக்கா நீரிணை உலகின் மிக முக்கிய கப்பல் பாதையாக விளங்குகிறது. இந்தியா, சீனா, ஜப்பான், தைவான், தென் கொரியா ஆகிய ஆசியாவின் பெரும் பொருளாதார நாடுகளை இணைக்கின்றது. இந்த இரண்டு நீரிணைகளும் தற்காத்துக் கொள்ள இந்திய- சீனாவுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
 
அதகேபோன்று, இந்தியாவின் 50 சதவிகித வெளிநாட்டு வர்த்தகம், 80% கச்சா எண்ணெய் இறக்குமதி,  மாலத்தீவுடன் நேரடியாகவோ, மறைமுறகமாவோ தொடர்பு கொண்டுள்ளது. எனவே, இரு நாட்டு மக்கள் பயனடையும் வகையில் இரு தரப்பு உறவுகளை  விரிவாக்கம் செய்ய வேண்டும் என்பதே நிபுணர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.



Share this:

Danmark to colombo

india

india

india

danmark

india

india

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

Hajj Packages 2020

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies