வார ராசி பலன் - 05-01-2024 முதல் 11-01-2024 வரை

05 Jan,2024
 

இந்த வாரம் கிரகங்களின் சஞ்சாரம் சூரியன் - தனுசு ராசி செவ்வாய் - தனுசு ராசி புதன் - விருச்சிகம்- தனுசு ராசி குரு - மேஷ ராசி சுக்கிரன் - விருச்சிகம் ராசி சனி -கும்ப ராசி ராகு - மீன ராசி கேது - கன்னி ராசி
 
 
 
மேஷம் 
 
வீரத்தை அணிகலனாகக் கொண்ட செவ்வாயை அதிபதியாகப் பெற்றுள்ள மேஷ ராசி அன்பர்களே...நவக்கிரக நாயகர்களின் முதல்வரான சூரியன் உங்கள் ராசிக்கு 9 ஆம் இடத்தில் இருக்கிறார். தொழிலுக்கு எதிராக கிளம்பிய போட்டிகளை துவம்சம் செய்ய தொடை தட்டி நிற்பீர்கள். துணிச்சலுடன் வியாபாரத்திற்குத் தேவையான முதலீடுகளை செய்வீர்கள். சந்திரனின் நகர்வுகள் உங்களுக்குச் சாதகமாக இருப்பதால் நினைத்த காரியத்தில் வெற்றி பெறுவீர்கள். புதிய வேலை வாய்ப்புகள் வீடு தேடி வரும். செவ்வாய் 9 ஆம் இடத்தில் அமர்ந்திருக்கிறார். எந்த விஷயத்திலும் நியாயம் தவறக் கூடாது என்று நினைப்பீர்கள். ஆனால் கொப்பளித்து வரும் கோபத்தைக் கண்டிப்பாக கட்டுப்படுத்த வேண்டும். புதன் 8,9 ஆம் இடத்தில் இருக்கிறார். அறிவும் அருளும் உங்களுக்கு பக்க துணையாக இருக்கும். தெளிவான சிந்தனையுடன் வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்வீர்கள். குருபகவான் உங்கள் ராசிக்கு 1 ஆம் இடத்தில் இருக்கிறார். குடும்பத்தில் நிம்மதி காணாமல் போகும். உறவுகளில் பிணக்கு ஏற்படும். சுக்கிரன் உங்கள் ராசிக்கு 8 ஆம் வீட்டில் இருக்கிறார். சுப நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள். தேடி அலைந்த வரன் வீடு தேடி வரும். சனி பகவான் உங்கள் ராசிக்கு 11 ஆம் வீட்டில் இருக்கிறார். தொழில்துறைகள் முன்னேற்றமாக நடந்து பண வரவு அதிகரிக்கும். ஆன்லைன் வர்த்தகங்களில் ஆர்வமுடன் ஈடுபடுவீர்கள். ராகு பகவான் 12 ஆம் இடத்தில் இருக்கிறார். குடும்பத்தில் தேவையில்லாத சிக்கலை உண்டாக்காதீர்கள். சிலருக்கு எதிர்பாராத பணவரவு கிடைத்து தேவையைப் பூர்த்தி செய்யும். கேது 6 ஆம் வீட்டில் இருக்கிறார். வியாபாரம் காரணமாக குடும்பத்தை சில காலம் பிரிந்து இருப்பீர்கள். 7,8,9 ஆம் தேதிகளில் சந்திராஷ்டமம். எச்சரிக்கையோடு செயல்படுங்கள்.
 
ரிஷபம்
 
 கலைநயம் மிளிரும் சுக்கிரனை அதிபதியாகக் கொண்ட ரிஷபராசி அன்பர்களே.... சூரிய பகவான் உங்கள் ராசிக்கு 8 ஆம் இடத்தில் இருக்கிறார். எந்தச் செயலையும் ஒரு தடவைக்கு இரு தடவை யோசித்துச் செய்யுங்கள். தொழில் தொடர்பான வியாபாரத்திலிருந்த தடைகள் விலகி ஓடும். சந்திர பகவான் உங்களுக்குச் சாதகமாகவே நகர்ந்து செல்கிறார். எடுத்த காரியத்தில் வெற்றி பெறுவீர்கள். வேலை இடத்தில் ஊழியர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. செவ்வாய் 8 ஆம் இடத்தில் இருக்கிறார். பிரச்சனைகளைப் பெரிதாக எண்ணாமல் லேசாக எடுத்துக் கொள்ளுங்கள். அதிக டென்சன் ஆனால் உடல் நலம் கெடும். புதன் 7,8 ஆம் இடத்தில் இருக்கிறார். சதுரங்க விளையாட்டை போல் சாகசமாக காரியம் ஆற்றுவீர்கள். புதிய தொழில்களில் முதலீடு செய்வீர்கள். வெளியூர்ப் பயணங்கள் சாதகமாக அமையும். குரு பகவான் 12 ஆம் இடத்தில் இருக்கிறார். நிலையான வருமானத்திற்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்வீர்கள்‌ ஆடை அணிமணிகள் மட்டுமல்லாமல் நகையும் வாங்குவீர்கள். சனி பகவான் 10 ஆம் வீட்டில் இருக்கிறார். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். பண வரவு தாராளமாக இருக்கும். போட்டி பந்தயங்களில் வெற்றி கிடைக்கும். ராகு பகவான் 11 ஆம் வீட்டில் இருக்கிறார். ஆலயங்களுக்குச் சென்று தெய்வ தரிசனம் செய்வீர்கள். கேது பகவான் 5 ஆம் இடத்தில் இருக்கிறார். வெளிநாட்டில் இருந்த நல்ல செய்தி வரும். தொழிலுக்கு இருந்த எதிர்ப்புகள் விலகும். 10,11,12 ஆம் தேதிகளில் சந்திராஷ்டமம். நிதானமாக நடந்து கொள்ளுங்கள்.
 
மிதுனம்
 
 எதிர்ப்புகளை புத்திசாலித்தனத்தால் முறியடிக்கும் புதனை அதிபதியாகக் கொண்ட மிதுன ராசி அன்பர்களே... எதிர்ப்புகளை புத்திசாலித்தனத்தால் முறியடிக்கும் புதனை அதிபதியாகக் கொண்ட மிதுன ராசி அன்பர்களே... சூரிய பகவான் 7 ஆம் இடத்தில் அமர்ந்திருக்கிறார். வெறுப்புகளை விளக்கி விட்டு பொறுப்புடன் செயலாற்றுவது நல்லது. உத்தியோகம் பார்ப்பவர்கள் நீண்ட நேரம் வேலை பார்க்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். சந்திர பகவானின் அருளால் குடும்பத்திலிருந்த பிரச்சனைகள் நீங்கி மனநிம்மதி உண்டாகும். செவ்வாய் 7 ஆம் வீட்டில் இருக்கிறார். கட்டுமானத் தொழில் சூடு பிடிக்கும். மணல் வியாபாரத்தில் லாபம் கொழிக்கும். புதன் 6,7 ஆம் இடத்தில் அமர்ந்திருக்கிறார். சிக்கலான காரியங்களைப் புத்திசாலித்தனத்தால் வெற்றிகரமாக முடிப்பீர்கள். தாய் மாமனுக்கு உதவி செய்வீர்கள். உறவினர்களை ஒன்று சேர்ப்பீர்கள். குருபகவான் 11 ஆம் வீட்டில் இருக்கிறார். அரசு வேலை வாய்ப்பு சாதகமாக இருக்கும். உத்தியோக உயர்வு உண்டாகலாம். தனியார் துறையிலும் ஊழியர்கள் சிறப்பாகப் பணியாற்றுவார்கள். சுக்கிரன் 6 ஆம் இடத்தில் இருக்கிறார். வாழ்க்கை கிளுகிளுப்பாக இருக்கும். மனதுக்குப் பிடித்தமானவரிடம் காதலைச் சொல்வீர்கள். திருமண காரியங்கள் கைகூடிவரும். சனி பகவான் 9 ஆம் இடத்தில் இருக்கிறார். தந்தையார் உடல்நிலையில் சற்று அக்கறை காட்டுங்கள். வாகனங்களில் செல்லும்போது எச்சரிக்கையாக இருங்கள். ராகு பகவான் 10 ஆம் வீட்டில் இருக்கிறார். ஆன்மீகப் பெரியவர்கள் சந்திப்பு கிடைக்கும். கோவில் திருப்பணிகளில் ஈடுபடுவீர்கள் கேது பகவான் 4 ஆம் வீட்டில் இருக்கிறார். பூர்வீகச் சொத்தில் இருந்த வில்லங்கம் விலகும்
 
மிதுனம் 
 
எதிர்ப்புகளை புத்திசாலித்தனத்தால் முறியடிக்கும் புதனை அதிபதியாகக் கொண்ட மிதுன ராசி அன்பர்களே... எதிர்ப்புகளை புத்திசாலித்தனத்தால் முறியடிக்கும் புதனை அதிபதியாகக் கொண்ட மிதுன ராசி அன்பர்களே... சூரிய பகவான் 7 ஆம் இடத்தில் அமர்ந்திருக்கிறார். வெறுப்புகளை விளக்கி விட்டு பொறுப்புடன் செயலாற்றுவது நல்லது. உத்தியோகம் பார்ப்பவர்கள் நீண்ட நேரம் வேலை பார்க்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். சந்திர பகவானின் அருளால் குடும்பத்திலிருந்த பிரச்சனைகள் நீங்கி மனநிம்மதி உண்டாகும். செவ்வாய் 7 ஆம் வீட்டில் இருக்கிறார். கட்டுமானத் தொழில் சூடு பிடிக்கும். மணல் வியாபாரத்தில் லாபம் கொழிக்கும். புதன் 6,7 ஆம் இடத்தில் அமர்ந்திருக்கிறார். சிக்கலான காரியங்களைப் புத்திசாலித்தனத்தால் வெற்றிகரமாக முடிப்பீர்கள். தாய் மாமனுக்கு உதவி செய்வீர்கள். உறவினர்களை ஒன்று சேர்ப்பீர்கள். குருபகவான் 11 ஆம் வீட்டில் இருக்கிறார். அரசு வேலை வாய்ப்பு சாதகமாக இருக்கும். உத்தியோக உயர்வு உண்டாகலாம். தனியார் துறையிலும் ஊழியர்கள் சிறப்பாகப் பணியாற்றுவார்கள். சுக்கிரன் 6 ஆம் இடத்தில் இருக்கிறார். வாழ்க்கை கிளுகிளுப்பாக இருக்கும். மனதுக்குப் பிடித்தமானவரிடம் காதலைச் சொல்வீர்கள். திருமண காரியங்கள் கைகூடிவரும். சனி பகவான் 9 ஆம் இடத்தில் இருக்கிறார். தந்தையார் உடல்நிலையில் சற்று அக்கறை காட்டுங்கள். வாகனங்களில் செல்லும்போது எச்சரிக்கையாக இருங்கள். ராகு பகவான் 10 ஆம் வீட்டில் இருக்கிறார். ஆன்மீகப் பெரியவர்கள் சந்திப்பு கிடைக்கும். கோவில் திருப்பணிகளில் ஈடுபடுவீர்கள் கேது பகவான் 4 ஆம் வீட்டில் இருக்கிறார். பூர்வீகச் சொத்தில் இருந்த வில்லங்கம் விலகும். கடகம் வளர்ச்சிகளை சீராக அள்ளித் தருகின்ற சந்திரனை அதிபதியாகக் கொண்ட
 
 கடக ராசி 
 
அன்பர்களே... சூரிய பகவான் உங்கள் ராசிக்கு 6 ஆம் வீட்டில் இருக்கிறார். திட்டம் போட்டு செலவு செய்யுங்கள். கெட்டிக்காரத்தனமாக இல்லாவிட்டால் பெட்டியில் இருக்கும் பணம் காணாமல் போகும். சந்திர பகவான் அனுக்கிரகமும் அவ்வளவு சாதகமாக இல்லை. வெளியூர்ப் பயணங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பணம் களவு போவதற்கான வாய்ப்பு உள்ளது. செவ்வாய் 6 ஆம் இடத்தில் இருக்கிறார். வெளிநாட்டிலிருந்து கிடைக்க வேண்டிய உதவிகள் தடையில்லாமல் வந்து சேரும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் சாதகமாக இருக்கும். பங்குச்சந்தை வியாபாரத்தில் நம்பி முதலீடு செய்யலாம். புதன் 5,6 ஆம் இடத்தில் இருக்கிறார். யாருக்கும் வாக்கு கொடுக்காதீர்கள். வார்த்தைகளில் வசந்தம் வீசட்டும். குரு பகவான் 10 ஆம் வீட்டில் இருக்கிறார். புதிய வீடு வாங்குவதற்கான சிந்தனை உண்டாகும். வீட்டைப் புதுப்பிக்கும் வேலையில் இறங்குவீர்கள். தக்க சமயத்தில் உறவினர்களுக்கு உதவி செய்வீர்கள். சுக்கிரன் 5 ஆம் இடத்தில் இருக்கிறார். குடும்பத்தில் குழப்பம் வராமல் பார்த்துக் கொள்ளுங்கள். இல்லை என்றால் மாமனார் வீட்டில் போய் கெஞ்ச வேண்டிய நிலை உருவாகும். சனி பகவான் 8 ஆம் வீட்டில் இருக்கிறார். கொடுக்கல் வாங்கலில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நீண்டதூரப் பயணங்களால் செலவு அதிகரிக்கும்.
 
 சிம்மம் 
 
அரசரைப் போல் கோலோச்சும் ஆற்றல்மிக்க சூரியனை அதிபதியாகக் கொண்ட சிம்ம ராசி அன்பர்களே... உங்கள் ராசிநாதன் 5 ஆம் இடத்தில் இருக்கிறார். அவசரப்பட்டு காரியத்தில் இறங்காமல் கொஞ்சம் ஆராய்ச்சி செய்யுங்கள். மற்றவர்களுக்காக நீங்கள் எடுக்கும் முயற்சி வெற்றி பெறும். கணவன் மனைவியிடவே இருந்த கருத்து வேறுபாடு நீங்கும். பிள்ளைகள் விஷயத்தில் நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு அரசாங்க உதவி கிடைக்கும். செவ்வாய் 5 ஆம் வீட்டில் இருக்கிறார். தொழிலுக்குப் போட்டிகள் அதிகரித்தாலும் பெரிய கெடுதல் வராது. தேவையில்லாத வார்த்தைகளைப் பேசக்கூடாது. புதன் 4,5 ஆம் வீட்டில் இருக்கிறார். தொழில் வியாபாரத்தில் திடீர் போட்டிகள் தோன்றி மறையும். பெண்களுக்கு இருந்த மனப்பாரம் குறையும். கலைத்துறையினர் புதிய படைப்புகளை வெளிக்கொண்டு வருவார்கள். குரு பகவான் 9 ஆம் வீட்டில் இருக்கிறார். மரியாதைக் குறைவு உண்டாவதால் மனக்கவலை அதிகரிக்கும். சனி பகவான் 7 ஆம் வீட்டில் இருக்கிறார். ஆன்லைன் வர்த்தகங்கள் சாதகமாக அமையும். புதிய தொழில்களில் முதலீடு செய்யலாம். வியாபாரம் முன்னேற்றகரமாக இருக்கும். ராகு பகவான் 8 ஆம் வீட்டில் இருக்கிறார். கடல் கடந்து செல்ல வேண்டிய வாய்ப்பு ஏற்படும். கேது பகவான் 2 ஆம் வீட்டில் இருக்கிறார். முயற்சிகளால் முட்டுக்கட்டைகளைத் தகர்த்து எறிவீர்கள். 
 
 
கன்னி 
 
அறிவுத் திறனை அள்ளித்தரும் புதனை அதிபதியாகக் கொண்ட கன்னி ராசி அன்பர்களே... சூரியன் 4 ஆம் இடத்தில் இருக்கிறார். சொத்து சம்பந்தப்பட்ட வழக்குகளில் வெற்றி பெறுவீர்கள். வாக்கு வன்மையால் வாடிக்கையாளர்களைக் கவர்ந்து விடுவீர்கள். புதிய பதவி மட்டுமல்லாமல் புதிய பொறுப்புகளை ஏற்க நேரிடும். அதிகாரிகள் கொடுத்த வேலையை முடித்து நன்மதிப்புக்கு ஆளாவீர்கள். செவ்வாய் 4 ஆம் வீட்டில் இருக்கிறார். அடுத்தவர் பேச்சை எளிதில் நம்பி விடாதீர்கள். கூட இருந்தே குழி பறிக்கும் நபர்களை அடையாளம் கண்டு ஒதுங்குங்கள். புதன் 3,4 ஆம் இடத்தில் இருக்கிறார். அரசு வேலையில் இருப்பவர்கள் மிகுந்த அனுகூலம் அடைவார்கள். குரு பகவான் 8 ஆம் இடத்தில் இருக்கிறார். தடைபட்ட திருமணம் நடக்கும். குழந்தை இல்லாத வீட்டில் மழலைப் பாக்கியம் உண்டாகும். சனி பகவான் 6 ஆம் வீட்டில் இருக்கிறார். தொழில்துறைகள் வேகம் எடுத்தாலும் கடுமையாக உழைக்க வேண்டிய கட்டாயம் உருவாகும். வியாபாரம் ஏற்ற இறக்கமாக இருக்கும். ராகு பகவான் 7 ஆம் இடத்தில் இருக்கிறார். சிலர் வீட்டில் மேடை வரை வந்த திருமணம் கூட தள்ளிப் போகலாம். குடும்பத்தில் எந்தக் காரணத்தை கொண்டும் கோபத்தைக் காட்டாதீர்கள். கேது பகவான் 1 ஆம் இடத்தில் இருக்கிறார். கொடுத்த வாக்கைக் காப்பாற்றவில்லை என்றால் அவமானம் வந்து சேரும்.
 
 துலாம் 
 
தர்ம அதர்மங்களுக்கு ஏற்ப பலன்தரும் சுக்கிரனை அதிபதியாகக் கொண்ட துலாம் ராசி அன்பர்களே... உங்கள் ராசிக்கு 3 ஆம் இடத்தில் சூரியன் இருக்கிறார். அனுபவப் பூர்வமான அறிவுத்திறன் உங்களுக்குக் கை கொடுக்கும். கணவன் மனைவிக்கு இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் அகலும். வாய்க்கு ருசியான உணவில் அதிக நாட்டம் கொள்வீர்கள். செவ்வாய் பகவான் 3 ஆம் வீட்டில் இருக்கிறார். வெட்டிப் பேச்சுக்கள் விவகாரத்தைக் கொண்டு வரும். பிள்ளைகளின் கல்வி தொடர்பான விஷயங்களில் ஆலோசித்து முடிவு எடுங்கள். புதன் 2,3 ஆம் வீட்டில் இருக்கிறார். வியாபாரத்தை விரிவுபடுத்த கடையை அழகுபடுத்துவீர்கள். புதிய முதலீடுகளுக்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்வீர்கள். குரு பகவான் 7 ஆம் இடத்தில் இருக்கிறார். நீண்ட காலமாக பாதிப்பைத் தந்த நோய் அகலும். உறவுகள் நட்புகள் மேம்படும். எதிர்ப்புகளை முறியடிப்பீர்கள். சுக்கிரன் 2 ஆம் வீட்டில் இருக்கிறார். மங்கல நிகழ்ச்சிகளுக்கு தடையில்லை. ஆடம்பரமான விருந்து உபசரிப்புகளைச் செய்வீர்கள். சனி பகவான் 5 ஆம் வீட்டில் இருக்கிறார். நிலம் வாங்குவதில் அக்கறை காட்டுவீர்கள். ரியல் எஸ்டேட் தொழில் முன்னேற்றமாக காணப்படும். ராகு 6 ஆம் வீட்டில் இருக்கிறார். குடும்பத்தில் குழப்பம் உருவாகலாம். மனநிம்மதிக்கு பங்கம் உண்டாகும். கேது 12 ஆம் இடத்தில் அமர்ந்து இருக்கிறார். எதையும் யோசித்து செய்யுங்கள். 
 
விருச்சிகம் 
 
போர்க்குணம் கொண்ட பூமிகாரகனான செவ்வாயை அதிபதியாகக் கொண்ட விருச்சிக ராசி அன்பர்களே... சூரியன் 2 ஆம் வீட்டில் இருக்கிறார். கணவன் மனைவிக்கிடையே போட்டி ஆகவே ஆகாது. பணிவாக நடந்து கொண்டால் பொது இடங்களில் உங்கள் செல்வாக்கு உயரும். ஏற்றுமதி இறக்குமதி தொழிலில் எச்சரிக்கை தேவை. சரக்குகளை அனுப்பி வைக்கும் போது பாதுகாப்பு அம்சங்களைக் கவனத்தில் கொள்ளுங்கள். திருமண முயற்சிகள் சாதகமான பலனைத் தரும். செவ்வாய் 2 ஆம் இடத்தில் இருக்கிறார். போட்டி பந்தயங்களில் விளாசித் தள்ளுவீர்கள். கமிஷன் வியாபாரங்கள் நல்ல லாபத்தைக் கொண்டு வரும். நிலம் வாங்கி விற்கும் தொழில் அமோகமாக நடக்கும். புதன் 1,2 ஆம் இடத்தில் இருக்கிறார். யாருக்கும் வாக்குக் கொடுக்காதீர்கள். ஜாமீன் கையெழுத்துப் போடாதீர்கள். குருபகவான் 6 ஆம் வீட்டில் இருக்கிறார். பிள்ளைகளின் நடவடிக்கையை அணுக்கமாகக் கண்காணியுங்கள். சனி பகவான் 4 ஆம் வீட்டில் இருக்கிறார். வியாபாரம் மள மளவென்று உயரும். தொழில்துறையில் சாதனை படைப்பீர்கள். உத்தியோகம் பார்ப்பவர்கள் உற்சாகமாக இருப்பார்கள். ராகு பகவான் 5 ஆம் வீட்டில் இருக்கிறார். எதிர்பாராத இடத்திலிருந்து பணவரவு உண்டாகும். கேது 11 இல் அமர்ந்திருக்கிறார் பெரிய மனிதர்களின் சந்திப்பால் அரசாங்க வேலை துரிதமாக நடக்கும். 
 
தனுசு
 
 வினைப்பயனை அறுக்கின்ற வியாழ பகவானை அதிபதியாகக் கொண்ட தனுசு ராசி அன்பர்களே... சூரியன் 1 ஆம் இடத்தில் இருக்கிறார். நினைத்த காரியத்தை நினைத்தபடி முடிக்க முயற்சிகளை மேற்கொள்வீர்கள். பழைய பாக்கிகளை அதிரடியாக வசூல் செய்வீர்கள். கணவன் மனைவிக்கு இடையே மனம் வருந்தும்படியான நிகழ்ச்சி நடக்கும். அதனால் பிள்ளைகள் அலட்சியமாக நடந்து கொள்வார்கள். செவ்வாய் 1 ஆம் வீட்டில் இருக்கிறார். மங்கல நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளைச் செய்வீர்கள். புதிய வாகனம் வாங்குவீர்கள். புதன் 1,12 ஆம் வீட்டில் இருக்கிறார். தள்ளிப்போன திருமணத்தைச் சொல்லி வைத்து நடத்துவீர்கள். பொதுநல சேவைகளில் ஈடுபட்டு பலரின் பாராட்டைப் பெறுவீர்கள். குரு 5 ஆம் வீட்டில் இருக்கிறார். வங்கி சேமிப்பு உயரும். பணவரவு தாராளமாக இருக்கும். சனி பகவான் 3 ஆம் வீட்டில் அமர்ந்திருக்கிறார். உங்கள் வாக்கு பலிக்கும். ஆகவே, யாரையும் மனம் நொந்து திட்டாதீர்கள். கடந்த காலத்தில் வாங்கிய நிலத்திற்கு பத்திரம் போடுவீர்கள். ராகு பகவான் 4 ஆம் வீட்டில் இருக்கிறார். பிள்ளைகளுக்கான செலவு கை மீறிப் போகும். கேது பகவான் 10 ஆம் வீட்டில் இருக்கிறார். பழைய கடன்களை அடைப்பீர்கள். வீடு வாகன தவணைகளை முறையாக செலுத்துவீர்கள். 
 
மகரம் வியூகங்கள் மூலம் வெற்றிகளைக் காணும் மந்தனின் ஆதிக்கம் கொண்ட
 
 மகர ராசி
 
 அன்பர்களே.... சூரியன் 12 ஆம் வீட்டில் இருக்கிறார். கடந்த கால சோர்வுகளை விரட்டி அடிப்பீர்கள். புதுப்புது சிந்தனைகளால் வியாபாரத்தைப் பெருக்குவீர்கள். துரோகிகளைக் கூட நண்பர்களாக மாற்றுவீர்கள். சகோதரிகளுக்குத் தேவையான உதவிகளை மனம் கோணாமல் செய்வீர்கள். உறவுகளை ஒன்று சேர்ப்பதில் முனைப்புக் காட்டுவீர்கள். செவ்வாய் 12 ஆம் வீட்டில் இருக்கிறார். மற்றவர்கள் பொறாமைப்படும் அளவுக்கு வியாபாரத்தைப் பெருக்குவீர்கள். வீட்டிற்குத் தேவையான அனைத்தையும் செய்வீர்கள். புதன் 11,12 ஆம் வீட்டில் இருக்கிறார். உங்களைக் கெடுப்பதற்கு என்று புது நண்பர்கள் வருவார்கள். எச்சரிக்கையாக இருங்கள். குரு பகவான் 4 ஆம் வீட்டில் இருக்கிறார். சகோதர உறவுகளுக்கு செலவு செய்வீர்கள். புதிய ஆர்டர்களைப் பெறுவதில் வெற்றி காண்பீர்கள். சுக்கிரன் 11 ஆம் வீட்டில் இருக்கிறார். விளையாட்டுக்குப் பேசி வினையை விலைக்கு வாங்காதீர்கள். ஆண் பெண் இடையே இடைவெளி அதிகம் இருக்கட்டும். சனிபகவான் 2 ஆம் இடத்தில் இருக்கிறார். தொலைதூரப் பயணங்களில் பணம் விரையம் ஏற்படும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து பணம் கிடைக்கத் தாமதமாகும். ராகு பகவான் 3 ஆம் வீட்டில் இருக்கிறார். அரசுத்துறை வேலைகளில் கொஞ்சம் சுணக்கம் ஏற்படும். கேது பகவான் 9 ஆம் வீட்டில் இருக்கிறார். பெரிய மனிதர்கள் ஆசியால் வீட்டில் நல்ல காரியங்கள் நடக்கும். 
 
கும்பம் 
 
சாணக்கியத்தனத்தால் சாதனை புரியும் சனிபகவானை அதிபதியாகக் கொண்ட கும்ப ராசி அன்பர்களே... சூரியன் 11 ஆம் வீட்டில் அமர்ந்திருக்கிறார். என்னதான் சமத்தாக வேலை பார்த்தாலும் அதிகாரிகளைத் திருப்திப்படுத்த முடியாது. வேலை இடத்தில் எச்சரிக்கையாக இல்லாவிட்டால் வீண் பழியைச் சுமக்க நேரிடும். ஆன்லைன் சூதாட்டங்களில் பணத்தைத் தொலைத்து விடாதீர்கள். போட்டி பந்தயங்கள் சாதகமாக அமையாது. செவ்வாய் 11 ஆம் வீட்டில் இருக்கிறார். எந்தக் காரியத்திலும் துணிச்சலாக இறங்குவீர்கள். அதில் வெற்றியும் பெறுவீர்கள். வியாபாரிகள் புதிய பொருட்களை அறிமுகம் செய்வார்கள். வாடிக்கையாளர் வருகையால் பணவரவு தாராளமாக இருக்கும். புதன் 10,11 ஆம் வீட்டில் இருக்கிறார். தாய்மாமன் உறவில் விரிசல் ஏற்படும். அதனால் இரண்டு குடும்பத்திற்கும் இடையே சச்சரவுகள் தோன்றலாம். குரு பகவான் 3 ஆம் வீட்டில் இருக்கிறார். சுப நிகழ்ச்சிகளில் செலவுகள் அதிகரிக்கும். மகளுக்குத் தேவையான நகைகள் வாங்குவீர்கள். சனிபகவான் சொந்த வீட்டில் இருக்கிறார். வெளிநாட்டில் இருந்து நல்ல செய்தி வர தாமதமாகும். மருத்துவச் செலவுகள் வரலாம். வாகனங்களில் செல்லும்போது கவனத்தைச் சிதற விடாதீர்கள். பொருட்களைப் பத்திரமாக வைத்திருங்கள். ராகு 2 ஆம் இடத்தில் இருக்கிறார். எதிர்பாராத வகையில் பண வரவு உண்டாகும். கேது பகவான் 8 ஆம் இடத்தில் இருக்கிறார். குடும்பத்துடன் ஆன்மீகச் சுற்றுலா செல்வீர்கள். மீனம் பார்வையால் பலன்களை அள்ளித்தரும் குரு பகவானை அதிபதியாகக் கொண்ட
 
 மீனராசி
 
 அன்பர்களே.
 
... சூரிய பகவான் உங்கள் ராசிக்கு 10 ஆம் வீட்டில் அமர்ந்திருக்கிறார். தொழில் முதலீடுகளை அதிகப்படுத்த அரசாங்க கடன் வாங்குவீர்கள். கட்டுமானத் துறையில் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவீர்கள். பழுதான வாகனங்களைச் சீர்படுத்துவீர்கள். அவசியமான வேலைகளைத் தவிர்த்து வெளியூர்ப் பயணங்களை ஒத்தி வைப்பது நல்லது. தகுதியான இடத்தில் தங்குங்கள். கண்ட இடங்களில் சாப்பிடாதீர்கள். சந்திரனின் சஞ்சாரம் சாதகமாக இல்லை. கொடுக்கல் வாங்கலில் கவனமுடன் இருக்க வேண்டும். பத்திரங்களில் கையெழுத்துப் போடும்போது படித்துப் பாருங்கள். செவ்வாய் 10 ஆம் வீட்டில் இருக்கிறார். மணல் செங்கல் சல்லி வியாபாரம் அமோகமாக நடக்கும். புதன் 9,10 ஆம் வீட்டில் இருக்கிறார். கல்லூரிப் பேராசிரியர்கள், எழுத்தாளர்கள், வழக்கறிஞர்கள் மிகப்பெரிய முன்னேற்றம் காண்பார்கள். குருபகவான் 2 ஆம் இடத்தில் அமர்ந்து இருக்கிறார். சின்னச்சின்ன சச்சரவுகள் குடும்பத்தில் தோன்றலாம். தேவையில்லாத பணச்செலவு உண்டாகி கடன் வாங்கும் நிலையை ஏற்படுத்தும். சுக்கிரன் 9 ஆம் வீட்டில் இருக்கிறார். திடீரென்று திருமண வாய்ப்பு வரும். சனி பகவான் 12 ஆம் வீட்டில் இருக்கிறார். எதிர்பாராத இடத்திலிருந்து தேவையான உதவி கிடைக்கும். உடலில் இருந்து எலும்புப் பிரச்சனைகள் தீரும். ராகு 1 ஆம் வீட்டில் இருக்கிறார். வாக்கு சாதுர்யத்தால் உறவினர்களின் பிரச்சனையைத் தீர்ப்பீர்கள். கேது 7 ஆம் வீட்டில் இருக்கிறார். குடும்பத்தில் கொஞ்சம் சலசலப்பு உண்டாகும். 5,6,7 ஆம் தேதிகளில் சந்திராஷ்டமம். கவனமாக காரியமாற்றுங்கள்
 
l

 



Share this:

Danmark to colombo

india

india

india

danmark

india

india

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

Hajj Packages 2020

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies