நண்பனின் மனைவியுடன் பழக்கம் – உயிரை காவு வாங்கிய திருமணத்தை மீறிய உறவு
30 Dec,2023
வேலைக்கு சென்ற நேரத்தில் வீட்டிற்கு வந்து சென்றதால் ஆத்திரத்தில் கொலை செய்யததாகவும் கணவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
சென்னை புது வண்ணாரப்பேட்டை ஜீவா நகரைச் சேர்ந்தவர்கள் சங்கர்- புவனேஸ்வரி தம்பதி. கோயம்பேடு மார்க்கெட்டில் சங்கர் மூட்டை தூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். அவருடன் வேலை பார்த்த நண்பர் உதயா, சங்கரின் வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்தார். அப்போது நண்பனின் மனைவியுடன் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் அது ரகசிய உறவாக மாறியது. சங்கர் இல்லாத நேரம் வீட்டிற்கு வந்து புவனேஸ்வரியுடன் அடிக்கடி நெருக்கமாக இருந்தார். மனைவியின் நடவடிக்கை சரியில்லை என்பதை உணர்ந்த சங்கர், புவனேஸ்வரியை நோட்டமிட தொடங்கினார். அதில் தனது நண்பருடன் புவனேஸ்வரி ரகசிய உறவில் இருப்பது தெரிந்து சங்கர் ஆத்திரமடைந்தார். இது தொடர்பாக இருவரையும் கண்டித்தவர், உறவை கைவிடும்படிக் கூறி எச்சரிக்கை விடுத்தார்.
சங்கர் பலமுறை எச்சரித்தும புவனேஸ்வரி – உதயா தொடர்ந்து பழகி வந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று, வழக்கம் போல உதயா தனது ரகசிய காதலியை பார்க்க நண்பனின் வீட்டிற்கு வந்தார். அப்போது அங்கு மறைந்திருந்த சங்கர், கத்தியை எடுத்து அவரை சரமாரியாக வெட்டினார். இதில் உதயாவுக்கு தலை, கழுத்து மற்றும் தோள்பட்டையில் பலத்த வெட்டு காயங்கள் ஏற்பட்டன. இதை பார்த்து அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்ட உதயா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்
சம்பவம் தொடர்பாக காவல் நிலையத்தில் சங்கர் சரணடைந்தார். அத்துடன், தனது மனைவியுடன் ரகசிய தொடர்பில் இருந்ததால், ஆத்திரத்தல் நண்பர் உதயாவை கொலை செய்ததாக சங்கர் வாக்குமூலம் அளித்தார். இதையடுத்து, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் சிறையில் அடைத்தனர்.