இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரான் புரட்சி படை தளபதி சுட்டுக் கொலை
26 Dec,2023
காசா: இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரான் புரட்சி படை தளபதி ராஸி மவுசவி சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த அக். 7ம் தேதி ஹமாஸ் தீவிரவாதிகள் இஸ்ரேல் மீது நடத்திய தாக்கதலின் பின்னணியில் ஈரான் இருப்பதாக கூறப்படுகிறது. ஹமாசுக்கு ஆதரவாக லெபனான் மற்றும் சிரியாவிலிருந்து இஸ்ரேலுக்கு எதிராக தாக்குதல்கள் நடந்து வருகின்றன. இந்த தாக்குதலின் பின்னணியில் ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் ஈரானின் புரட்சிகரப் படையின் மூத்த தளபதி ராஸி மவுசவி என்பவர், சிரியாவில் நடந்த தாக்குதலில் கொல்லப்பட்டார்.
ஈரான் நாட்டுக்கு வெளியே கொல்லப்பட்ட ராஸி மவுசவி கொல்லப்பட்ட விசயத்தை, இஸ்ரேல் பாதுகாப்புப் படை உறுதிப்படுத்தவில்லை. ஆனால் இஸ்ரேல் தாக்குதலில் தான் அவர் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. அவர் ஈரானின் இஸ்லாமியப் புரட்சிப் படையின் வெளிநாட்டுப் பிரிவான குட்ஸ் படையின் முக்கிய ஆலோசகராக செயல்பட்டு வந்ததாகவும், சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸின் சைனபியா மாவட்டத்தில் நடந்த ஏவுகணைத் தாக்குதலில் அவர் கொல்லப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.