காதலிக்கு மது அருந்த கொடுத்து பாலியல் துஷ்பிரயோகம் செய்த காதலன் கைது
23 Dec,2023
.
இந்தியாவில் காதலிக்கு மது அருந்த கொடுத்து பாலியல் துஷ்பிரயோகம் செய்து அதனை காணொளிகளாக எடுத்து பதிவிட்ட காதலன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் 33 வயதுடைய இளைஞராவார்.
இவர் தனது 28 வயதுடைய காதலிக்கு குளிர்பானம் என கூறி மதுபானம் அருந்த கொடுத்துள்ளார்.
பின்னர் கோயிலுக்கு அழைத்துச் செல்வதாக கூறி ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று காதலியை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண் தனது பெற்றோரிடம் இது தொடர்பில் தெரிவித்த நிலையில் அவரது பெற்றோர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.
இதனையடுத்து சந்தேக நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டதோடு காணொளிகளை எடுக்க பயன்படுத்தப்பட்ட கையடக்கத் தொலைபேசி பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.