கூகுள் பிளே ஸ்டோர் மீது அமெரிக்காவில் வழக்கு.
22 Dec,2023
கூகுள் பிளே ஸ்டோர்களில் உள்ள பல்வேறு செயலிகளை பதிவிறக்கம் செய்ய குறிப்பிட்ட அளவு கட்டணத்தை கூகுள் வசூலிக்கிறது. இந்நிலையில் ஆண்ட்ராய்டு ஆஃப் ஸ்டோரில் பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் ஆஃப் பர்சேஸ்சுகள் மூலம் வாடிக்கையாளர்களிடம் அதிக கட்டணம் வசூலிப்பதாக கூகுள் மீது குற்றச்சாட்டு எழுந்தது. பயனர்கள் சார்பில் கூகுள் மீது அதிக கட்டணம் தொடர்பாக கலிபோர்னியா நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்குகளும் தொடரப்பட்டன. போட்டிகளை தடுப்பதற்காக எதிர்ப்பு தந்திரங்களை பயன்படுத்துவதாகவும் கூகுள் மீது குற்றம் சாட்டப்பட்டது.
வாடிக்கையாளர்களின் நம்பிக்கைக்கு ஊடு விளைவித்து விட்டதால் கூகுள் நிறுவனம் தனது பயனர்களுக்கு இழப்பீடு வழங்கவேண்டும் என்றும் வாதிடப்பட்டது. செயலி விற்பனையில் எந்த தவறும் நடைபெறவில்லை என்று கூகுள் தரப்பிலும் வாதம் வைக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் அமெரிக்கா முழுவதும் உள்ள பயனர்களுக்கு இழப்பீடாக சுமார் ரூ.6,000 கோடியை வழங்க கூகுள் நிறுவனம் நீதிமன்றத்தில் ஒப்பு கொண்டுள்ளது. ஆகஸ்ட்16- 2016 மற்றும் செப்டம்பர்30- 2023க்கு இடைப்பட்ட காலத்தில் கூகுள் பிளேயில் செயலியை வாங்கிய நுகர்வோர் இந்த இழப்பீட்டை பெற தகுதியானவர்கள் ஆவர். அமெரிக்கா முழுவதிலும் உள்ள ஒரு கோடிக்கு அதிகமான நுகர்வோர் கூகுளின் இழப்பீட்டு தொகையை பெற உள்ளனர்.