அதிகம் டீ குடித்ததால் சிறுநீரகத்தில் 300 கற்கள்..! அறுவை சிகிச்சை செய்து அகற்றம்!
17 Dec,2023
.
அதிகம் டீ குடித்ததால் ஒரு இளம்பெண்ணின் வயிற்றில் 300 கற்கள் உருவான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
,
பொதுவாக நாம் தண்ணீர் சரியான அளவில் அருந்தாவிட்டால் உடலில் உள்ள கழிவுகள் சரியாக வெளியேறாது. அவை சிறுநீரகத்தில் தங்கி கல்லாக மாறி பெரும் பிரச்சினையை ஏற்படுத்துகிறது. இவ்வாறான கற்கள் மருந்துகள் மூலம் கரைக்கப்படுகின்றன அல்லது அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்படுகின்றன.
சமீபத்தில் தைவானில் சியோ பு என்ற 20 வயது இளம்பெண்ணுக்கு சிறுநீரக அறுவை சிகிச்சை செய்து அவரது சிறுநீரகத்தில் இருந்து சுமார் 300 கற்கள் அகற்றப்பட்டுள்ளன. சியோ பு தண்ணீர் குடிக்கும் பழக்கம் இல்லாதவராக இருந்துள்ளார். அதனால் தாகம் எடுத்தால் கூட தண்ணீருக்கு பதிலாக பபிள் டீ (Bubble Tea) எனப்படும் டீ வகையை மட்டுமே அதிகமாக பருகி வந்துள்ளார். அதனால் கழிவுகளை வெளியேற்ற தேவையான நீர்ச்சத்து இல்லாமல் கற்கள் உருவாகியுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.