உலகின் பாதி தங்கத்தை வைத்திருந்த அரசர், கோட்டை கட்டி பாதுகாத்த கதை தெரியுமா,?
16 Dec,2023
எல் டொராடோ என்ற தங்க நகரத்தின் கதைகளை பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கக்கூடும். அது கதையாக மட்டுமே இருக்கும் நிலையில், உலகிலேயே தற்போது வரை யாரிடமும் இல்லாத அளவு ஒருவர் தங்கம் வைத்திருந்தார்.
உலகளவில் பெரிய சொத்து வைத்திருப்பவர்கள் என்றால் அது தொழிலதிபர்களாக இருப்பார்கள். அசையா சொத்து, அசையும் சொத்து என்று அவர்களின் சொத்துகளை பில்லயன் கணக்கில் கணக்கிடலாம். ஆனால், ஆதி காலத்தில் தங்கம் வைத்திருப்பவரையே பெரிய பணக்காரராக கருதிகின்றனர்.
எல் டொராடோ என்ற தங்க நகரத்தின் கதைகளை பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கக்கூடும். அது கதையாக மட்டுமே இருக்கும் நிலையில், உலகிலேயே தற்போது வரை யாரிடமும் இல்லாத அளவு ஒருவர் தங்கம் வைத்திருந்தார். அவரை பற்றி கேள்விப்பட்டது உண்டா?
அவர்தான் அரசர் மன்ஸா மூசா. உலகிலேயே இவர்தான் மிகவும் பணக்கார அரசர் என வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர். மன்ஸா மூசா ஆட்சி புரிந்த சமயத்தில் உலகத்தில் உள்ள பாதிக்கும் மேற்பட்ட தங்கம் அவரிடம்தான் இருந்துள்ளன என கூறப்படுகிறது.
இன்று ஏழ்மையான நாடுகளில் ஒன்றாக இருக்கும் மாலி நாட்டில் அரசராக இருந்தார் மன்ஸா மூசா. 1312ஆம் ஆண்டு முதல் 1337ஆம் ஆண்டு வரை மாலி நாட்டை ஆட்சி செய்து வந்தார் மூசா. அந்தக் காலத்தில் உலகின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த வணிகர்களும் தங்கம் வாங்குவதற்காக மாலிக்கு வருகை தருவார்கள்.
அரசர் மூசா தன்னிடமிருந்த தங்கத்தை சேமித்து வைப்பதற்காக மிகப்பெரிய மாளிகையை கட்டியிருந்தார். இதோடு இன்னும் நிறைய தங்கங்களை தான் வாழும் அரச மாளிகையிலும் சேர்த்து வைத்திருந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
மன்ஸா மூசாவின் அன்றைய சொத்து மதிப்பு மட்டுமே அமெரிக்க டாலர் மதிப்பில் 400 பில்லியனாகும். இந்த தொகையை இந்திய மதிப்பில் கணக்கிட்டால் ரூ.33,00,000 கோடி வருகிறது. இந்த தொகை என்பது தற்போது இருக்கும் தொழிலதிபர்களை காட்டிலும் பல மடங்கும் அதிகம்.
ஹஜ் புனித யாத்திரைக்காக 1324ஆம் ஆண்டு மாலியிலிருந்து மெக்கா சென்றார் அரசர் மன்ஸா மூசா. இந்தப் பயணத்தில் தன்னோடு நூறு ஒட்டகம், நிறைய தங்கம், 12,000 சிப்பந்திகள், 8,000 பின்தொடர்பாளர்கள் ஆகிய பட்டாளங்களோடு சென்றார்.
இதன் மூலம் ஆஃப்ரிக்க கண்டத்தில் உள்ள சஹாரா பாலைவனத்தில் நுழைந்த மிகப்பெரிய கேரவன் இவருடையதுதான் என்ற சாதனையை இன்றுவரை யாராலும் முறியடிக்க முடியவில்லை.