எந்த நாட்டிற்கும் சொந்தம் இல்லாத பகுதி உலகில் உள்ளதுஸ எங்கே இருக்கிறது தெரியுமா?
16 Dec,2023
.
உலகில் அண்டார்டிகாவை தவிர்த்து எந்த நாடும் சொந்தம் கொண்டாடாத மிகப்பெரும் நிலப்பரப்பு உள்ளது. அது தொடர்பான தகவல்கள் ஆச்சரியம் அளிக்கின்றன.
உலகம் 7 கண்டங்களாகவும், பல நாடுகளாகவும் பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு நாடுகளுக்கும் தனித்தனி விதிகள் செயல்படுத்தப்படுகின்றன. அந்த வகையில் ஒரு நாட்டின் குடிமகன் அந்த நாட்டின் சட்ட திட்டங்களுக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும்.
இவ்வாறு உலகம் பிரிக்கப்பட்டதன் மூலம் ஆட்சி செய்வதும் மக்கள் நலனை பேணுவதும் எளிதாக்கப்பட்டுள்ளது. ஆனால் உலகில் எந்த நாட்டுக்கும் சொந்தம் இல்லாத பகுதி உள்ளது. அதுபற்றி உங்களுக்கு தெரியுமா?
.
அண்டார்டிகா பகுதியில் மனிதன் வாழத் தகுதியற்ற குளிர் நிலை காணப்படுவதால் அதனை எந்த நாடும் சொந்தம் கொண்டாடுவதில்லை. ஆனால் நாம் சொல்லப் போவது அண்டார்டிகாவை கிடையாது.
எகிப்து மற்றும் சூடான் நாடுகளின் எல்லைப் பகுதியில் சுமார் 2 ஆயிரம் கிலோமீட்டர் நீளம் கொண்ட நிலப்பரப்பு உள்ளது. இதனை பிர் தவில் (Bir Tawil ) என்று அழைக்கிறார்கள். இந்த பகுதி மலைகளால் சூழப்பட்டு பாலைவனத்தின் நடுவே மனிதன் வாழ்வதற்கு தகுதியற்ற பகுதியாக உள்ளது. இதனால் இந்த இடத்தை எந்த நாடும் அதிகாரப்பூர்வமாக உரிமை கொண்டாடவில்லை.
.
இருப்பினும் தனி நபர்கள் தங்கள நாடுகளுக்காக உரிமை கொண்டாடி இருக்கின்றனர். 2014 ஆம் ஆண்டில், அமெரிக்கரான ஜெரேமியா ஹீட்டன் அந்த இடத்தில் ஒரு கொடியை நட்டார். அந்த தளத்திற்கு வடக்கு சூடான் என்று பெயர் வைத்ததுடன், இந்த கற்பனை நாட்டின் குடியுரிமையை விற்கத் தொடங்கினார்.
.
இந்த ஆண்டு டிசம்பரில், ஒரு ரஷ்ய நபரும் இந்த இடத்திற்கு தனது உரிமையைக் கோரினார். இதற்கு மத்திய பூமியின் இராச்சியம் என்று பெயரிட்டார். இங்கு வந்து தங்களை இந்த இடத்தின் சொந்தக்காரர்கள் என்று அறிவிக்கும் பலர் உள்ளனர். ஆனால் சட்டப்பூர்வமாக இந்த பகுதி இன்னும் சுதந்திரமாக உள்ளது.