மாணவருடன் பாலியல் உறவு வைத்த டீச்சர் கைதுஸ .?
16 Dec,2023
.
ஆதாரத்திற்காக மாணவரின் தாயார் அந்த காட்சிகளையும், காரையும் தனது செல்போனில் படமாக்கி வைத்துக் கொண்டார்.
,
அமெரிக்காவில் மாணவருடன் பாலியல் உறவு வைத்துக் கொண்ட ஆசிரியை கேப்ரியேலா கர்டாயா என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதன் பின்னணி குறித்த தகவல்கள் சுவாரசியம் அளிக்கின்றன.
அமெரிக்காவின் வடக்கு கரோலினாவில் மெக்லம்பர்க் என்ற பகுதி உள்ளது. இங்குள்ள உயர்நிலைப் பள்ளியில் 26 வயதாகும் ஆசிரியை கேப்ரியேலா உயிரியல் (Biology) வகுப்பு எடுத்து வருகிறார். இவரிடம் படிக்கும் மாணவர் ஒருவர், ரக்பி என்ற விளையாட்டில் பங்கேற்று வருகிறார். அதற்கான பயிற்சியை அந்த மாணவர் மேற்கொண்டு வரும் நிலையில், பயிற்சி வகுப்புகளுக்கு மாணவர் வருவதில்லை என்ற தகவல் அவரது தாயாருக்கு கிடைத்துள்ளது.
.
தொடர்ந்து இந்த சம்பவம் நடந்து வந்த நிலையில் மகன் எங்கு செல்கிறார் என்பதை கண்டுபிடிக்க அவரது தாயார் முடிவு எடுத்துள்ளார். இதற்காக Life360 என்ற மொபைல் ஆப்பை பயன்படுத்தியுள்ளார்.
இந்த ஆப் குடும்ப உறுப்பினர்கள் பயன்படுத்த கூடிய ஒன்று. இதன் மூலம் தங்கள் குடும்பத்தில் உள்ளவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்ற விபரங்கள் தெரியவரும். இதனை பயன்படுத்தி மகன் எங்கே செல்கிறார் என்பதை அவரது தாயார் கண்காணிக்கத் தொடங்கியுள்ளார்.
இதில் மகன் அருகேயுள்ள பூங்காவில் காருக்குள் இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து அவர் சென்று பார்த்தபோது, அவரது மகனும், ஆசிரியை கேப்ரியலாவும் காருக்குள் பாலியல் உறவு செய்து கொண்டிருப்பது தெரியவந்தது.
.
ஆதாரத்திற்காக மாணவரின் தாயார் அந்த காட்சிகளையும், காரையும் தனது செல்போனில் படமாக்கி வைத்துக் கொண்டார். பின்னர் இதுபற்றி புகார் அளிக்கப்பட்ட நிலையில், மாணவரை தவறாக வழி நடத்தி அவருடன் செக்ஸ் வைத்த குற்றத்திற்காக ஆசிரியை கேப்ரியலா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
.
போலீசார் நடத்திய விசாரணையின்போது கேப்ரியலாவுக்கும் சம்பந்தப்பட்ட மாணவருக்கும் இடையே சில மாதங்களாக தொடர்பு இருந்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.