116 வயதுடைய உலகின் இரண்டாவது வயதான பெண் மரணம்
14 Dec,2023
உலகின் 2வது அதிக வயதான பெண் மரணம்உலகின் 2வது அதிக வயதான பெண் மரணம்
.உலகின் 2வது அதிக வயதான பெண்ணும், ஜப்பானின் மிக வயதான பெண்மணியுமான ஃபுசா தட்சுமி தனது 116 வயதில் காஷிவாராவில் உள்ள முதியோர் இல்லத்தில் காலமானார்.
.
ஜப்பான் உலகின் மனிதர்கள் மிக அதிக ஆயுட்காலம் வாழும் நாடுகளில் ஒன்றாகும். அதிக ஆயுட்காலம் வாழ்ந்த மிக வயதான மனிதர்களில் பல நபர்களின் தாயகமாக ஜப்பான் உள்ளது என்றே சொல்லலாம். உலகின் 2வது அதிக வயதான பெண்ணும், ஜப்பானின் மிக வயதான பெண்மணியுமான ஃபுசா தட்சுமி தனது 116 வயதில் காஷிவாராவில் உள்ள முதியோர் இல்லத்தில் காலமானார். ஃபுசா டாட்சுமி என்ற அந்த மூதாட்டி, நேற்று செவ்வாய்கிழமை, அவருக்குப் பிடித்த உணவான பீன்ஸ்-பேஸ்ட் ஜெல்லியை சாப்பிட்டு, பராமரிப்பு நிலையத்திலேயே மரணமடைந்தது தெரியவந்துள்ளது.
.
இது குறித்து பேசிய அதிகாரி ஒருவர், டாட்சுமி தனது 116வது வயதில் டிசம்பர் 12 ஆம் தேதி இறந்தார். இரண்டு உலகப் போர்கள் மற்றும் பல தொற்றுநோய்களின் இடையே வாழ்ந்த தட்சுமி, கடந்த ஆண்டு 119 வயதில் கேன் தனகா காலமான பிறகு ஜப்பானின் மூத்த நபராக அங்கீகரிக்கப்பட்டார். கின்னஸ் உலக சாதனைகள் ஏப்ரல் 2022 இல் தனகாவை உலகின் வயதான நபராக அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்தது. அவர் 116 வயதை எட்டிய வரலாற்றில் 27வது நபர் ஆனார். மேலும், அவ்வாறு செய்த ஏழாவது ஜப்பானியர் ஆவார்.
.
1907-இல் பிறந்த டாட்சுமி, ஒசாகாவில் ஒரு விவசாயியான தனது கணவருடன் மூன்று குழந்தைகளை வளர்த்தார். அவர் சமீபத்தில் தனது பெரும்பாலான நாட்களை முதியோர் இல்லத்தின் படுக்கையில் கழித்தார். மேலும் அங்கு பணிபுரியும் ஊழியர்களை தொடர்ந்து வாழ்த்தியதாக தெரிவித்தார். அறிக்கைகளின்படி, ஃபுசா டாட்சுமிக்கு முந்தைய உடல்நலப் பிரச்சனைகள் ஏதும் ஏற்படவில்லை, மேலும் அவர் தனது 70 வயதில் கீழே விழுந்ததில் தொடை எலும்பு மட்டும் முறிந்துள்ளது. இதை தவிர அவரது உடலில் வேறு எந்த பிரச்சனையும் இல்லை என கூறினார்.
.
ஒசாகா கவர்னர் ஹிரோஃபுமி யோஷிமுரா, செப்டம்பரில் டாட்சுமியின் நீண்ட ஆயுளைக் கொண்டாட அவர் கலந்து கொண்ட விருந்தை நினைவுகூர்ந்து எக்ஸ் பக்கத்தில் இரங்கல் தெரிவித்தார். அதில், ஃபுசா டாட்சுமி எவ்வளவு ஆரோக்கியமாக இருந்தார் என்பது எனக்கு இன்னும் நினைவிருக்கிறது, அவருடைய ஆத்மா சாந்தியடைய நான் மனதாரப் பிரார்த்திக்கிறேன் என பதிவிட்டிருந்தார்.