விமானத்தில் இலங்கை சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் ,49 வயதான இந்திய பிரஜை கைது
14 Dec,2023
விமானத்தில் வைத்து இலங்கையை சேர்ந்த சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட இந்திய பிரஜை கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் 49 வயதுடைய இந்திய பிரஜையாவார்.
பாதிக்கப்பட்ட சிறுமி இலங்கையை சேர்ந்த 8 வயதுடையவராவார்.
இன்று புதன்கிழமை (13) சவுதி அரேபியாவிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் விமானத்திலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் விமான பணியாளர்களிடம் விடுத்த முறைப்பாட்டின் அடிப்படையில் குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் குறித்த விமானத்திலிருந்து கட்டுநாயக்கவை வந்தடைந்து மீண்டும் இந்தியாவை நோக்கி புறப்படவிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
சிறுமி பரிசோதனைக்காக விமான நிலைய பொலிஸாரால் நீர்கொழும்பு பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்டவர் கொழும்பு கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.