கடுமையான தலைவலியுடன் மருத்துவமனைக்கு சென்ற நபர். காத்திருந்த அதிர்ச்சி!
10 Dec,2023
.
சீன நாட்டில் பன்றி இறைச்சி அதிகம் விரும்பி சாப்பிடும் நபரொருவர் தலைவலி மற்றும் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவரை நாடிய போது, அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
குறித்த நபரின் மூளை உட்பட உடம்பில் இருந்து 700 நாடாப்புழுக்களை மருத்துவர்கள் அகற்றியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
.
கிழக்கு சீனாவின் Hangzhou பகுதியை சேர்ந்த 43 வயது Zhu Zhong-fa என்பவர் ஒரு மாத காலமாக நோய்வாய்ப்பட்டு அவதியடைந்து வந்துள்ளார்.
.
மருத்துவர் Wang Jian-rong முன்னெடுத்த தீவிர பரிசோதனையில், அவருக்கு உரிய முறையில் சமைக்காத மாமிசம் சாப்பிடுவதால் ஏற்படும் taenaisis பாதிப்பு இருப்பதை உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவரது உடலின் முக்கிய உறுப்புகளில் நாடாப்புழுக்கள் உயிருடன் காணப்பட்டதையும் கண்டறிந்துள்ளார்.
.
விசாரித்ததில், தமக்கு விருப்பமான பன்றி இறைச்சியை அவர் அடிக்கடி சாப்பிட்டு வந்துள்ளதை ஒப்புக்கொண்டுள்ளார்.
.
இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட அறுவைச் சிகிச்சையில், மூளையில் இருந்தும், நுரையீரல் மற்றும் மார்பில் இருந்தும் நாடாப்புழுக்களை அப்புறப்படுத்தியுள்ளனர்.
அத்துடன், முறையாக சமைக்கப்படாத பன்றி அல்லது மாட்டிறைச்சியில் நாடாப்புழுக்களின் முட்டை காணப்படும் எனவும், அந்த உணவை சாப்பிடுவதால் உணவுக்குழாய் வழியாக உடம்புக்கும் நுழையும் நாடாப்புழுக்கள் பல்வேறு நோய்களை உருவாக்கும் எனவும் மருத்துவர் Wang எச்சரித்துள்ளார்.