பாகிஸ்தானில் மிருகக்காட்சி சாலை புலி கூட்டிலிருந்து ஆணின் சடலம் மீட்பு!
07 Dec,2023
பாகிஸ்தான் பஹவல்பூர் நகரில் உள்ள மிருகக்காட்சி சாலை ஒன்றின் புலியின் கூட்டிலிருந்து ஆணின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. நேற்று புதன்கிழமை (06) மிருகக்காட்சி சாலையை சுத்தம் செய்ய சென்ற ஊழியர்கள் புலி கடித்துக்கொண்டிருந்த காலணியொன்றை கண்டுள்ளனர். இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட தேடுதல் பணியில் கூட்டிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
எனினும் உயிரிழந்தவர் புலியின் கூட்டிற்குள் எவ்வாறு சென்றார் என்பது தொடர்பில் தகவல் எதுவும் இதுவரை கிடைக்கப்படவில்லை. உயிரிழந்து பல மணிநேரமாக அவர் கூட்டிற்குள் கிடந்துள்ளதாக பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
மேலும் புலிக்கூட்டில் இருந்து சடலம் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், சம்பவம் தொடர்பில் அந்நாட்டு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.