புளி மீன் குழம்பு
07 Dec,2023
தேவையான பொருட்கள்
மீன் – 1/2 கிலோ
பூண்டு – 4 பல்
எண்ணெய் – 100 மில்லி
புளிக்கரைசல் – 1/2 கப்
தேங்காய் – 1/2 மூடி (துருவி விழு தாக்கவும்)
மிளகாய்த் தூள் – 3 டீஸ்பூன்
உப்பு – தேவைக்கேற்ப
செய்முறை
மீனைச் சுத்தம் செய்து தலை, வால் ஆகிய வற்றை நறுக்கவும். உப்பு போட்டு திருப்பவும், சுத்தம் செய்யவும்.
ஒரு கடாயில் மூன்று டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தட்டிய பூண்டைச் சேர்க்கவும். தேங்காய் விழுதைச் சேர்த்து புளிக்கரை சலையும் சேர்க்கவும். கெட்டியான கிரேவியாக வரும் வரை சில நிமிடங்கள் வைத்தி ருக்கவும். மீனைச் சேர்த்து போதுமான உப்பு சேர்த்து குறைந்த தீயில் சில நிமிடங்கள் வைத்திருந்து இறக்கவும்.
சாதத்திற்குத் தொட்டுக் கொள்ள இந்த செய்முறை சுவையான தாக இருக்கும்.