இஸ்ரேல் பெண் வழக்கறிஞரை கடத்திய ஹமாஸ் அமைப்பு!
05 Dec,2023
கடந்த அக்டோபர் மாதம் 7 ஆம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் திடீர் தாக்குதல் நடத்தினர். இதில், பலர் கொல்லப்பட்டனர். அப்பகுதியில் இருந்து 250 பேரை பணயக் கைதிகளாகவும் பிடித்து காஸாவுக்கு கொண்டு சென்றனர்.
இதனால் ஆத்திரமடைந்த இஸ்ரேல் ஹமாஸ் மீது அதிரடி போர் தொடுத்தது. இதையடுத்து இரு நாடுகளும் ராக்கெடுகள் வீசி மாறி மாறி தாக்குதல் நடத்தி வரும் நிலையில் ஆயிரக்கணக்கான போர் வீரர்களும், மக்களும் உயிரிழந்துள்ளனர்.
இதற்கிடையில் 7 நாட்களாக போர் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், இஸ்ரேலியயா மற்றும் வெளி நாட்டு பணய கைதிகள் என 10 பேரை ஹமாஸ் விடுவித்தது.
இஸ்ரேலும் 240 ஹமாஸ் கைதிகளை விடுவித்தட் இரு தரப்பும் போர் நிறறுத்தம் முடிந்த நிலையில், போரில் ஈடுபட்டு வருகின்றன.
இஸ்ரேல் பாலஸ்தீனம் மீது அதிரடி தாக்குதல் நடத்தி வரும் நிலையில் அக்டோபர் 7 ஆம் தேதி இஸ்ரேல் பகுதியில் இருந்து ஆயுதமேந்திய ஹமாஸ் அமைப்பினர் அமித் சவுசனா என்ற பெண் வழக்கறிஞரை கடத்திச் செல்லும் காட்சிகள் வெளியாகியுள்ளது.
போர் நிறுத்த காலத்தின் விடுவிக்கப்பட்டவர்களின் வழக்கறிஞரையும் ஹமாஸ் விடுவித்ததாக பத்திரிக்கைகளில் தகவல் வெளியாகின்றன.