உங்கள் கிட்னி செயலிழந்துவிட்டதை உணர்த்தும் 5 அறிகுறிகள்.. சிறுநீர் கழிக்கும்போது இதை கவனிங்க..!
25 Nov,2023
சிறுநீரில் ரத்தக் கசிவு அல்லது சிவப்பு நிறத்தில் சிறுநீர் வெளியேறுவது என்பது கிட்னி பாதிக்கப்பட்டுள்ளது என்பதற்கான அறிகுறியாகும்.
உடலில் இருக்கும் கழிவுகளை சிறுநீர் வழியாக வெளியேற்றவும் உதவும் உறுப்பு சிறுநீரகம். உடல் சீராக இயங்கவும், ஆரோக்கியமாக செயல்படவும் கிட்னியின் இயக்கம் மிகவும் முக்கியம். ஆனால் கிட்னி பாதிப்பு அடைய தொடங்கி இருக்கிறது அல்லது ஏதேனும் கிட்னியின் செயல்பாடு குறைந்து இருக்கிறது என்ற நிலையில் உடலில் இருக்கும் நச்சுக்கள் தேங்கத் துவங்கும். கிட்னி பாதிக்கப்பட்டிருக்கிறது என்பதை ஒரு சில அறிகுறிகள் மூலம் எளிதாக தெரிந்து கொள்ளலாம். பின்வரும் அறிகுறிகளில் ஏதேனும் ஒன்று தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகுவது அவசியம்.
சிறுநீரில் ரத்தக் கசிவு அல்லது சிவப்பு நிறத்தில் சிறுநீர் வெளியேறுவது என்பது கிட்னி பாதிக்கப்பட்டுள்ளது என்பதற்கான அறிகுறியாகும். சிறுநீரகங்களில் பிளீடிங் ஏற்பட்டிருக்கலாம் அல்லது யூரினரி டிராக்கில் காயம், பாதிப்பு அல்லது ரத்தக்கசிவு ஏற்பட்டிருக்கலாம்.
சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டு இருக்கின்றது என்பதன் முதல் அறிகுறி சிறுநீரில் தென்படும் மாற்றங்கள் தான். சிறுநீரில் நுரை போல தென்பட்டால், உங்கள் உடலிலிருக்கும் புரதச் சத்தும் சிறுநீருடன் வெளியேறுகிறது என்பதை குறிக்கிறது. பொதுவாகவே சிறுநீரில் புரோட்டீன் இருக்காது. சிறுநீரகங்களால் புரோட்டினை சிந்தசைஸ் செய்ய முடியவில்லை என்றால் அது சிறுநீர் வழியாக வெளியேறிவிடும். இது கிட்னி பழுதாகி வருகிறது என்பதற்கான எச்சரிக்கை அறிகுறியாகும்.
திடீரென்று சிறுநீரின் நிறத்தில் மாற்றம் ஏற்பட்டால், அது உடலில் ஏதேனும் ஒரு பிரச்சனை இருக்கிறது என்பதை குறிக்கிறது. பெரும்பாலான நேரங்களில் சிறுநீரின் நிறத்தில் உள்ள மாற்றம் கிட்னி சரியாக செயல்படவில்லை என்பதன் அறிகுறியாகும். உதாரணமாக கிட்னி பழுதாகி இருந்தால், வழக்கத்தை விட அடர்நிறத்தில் சிறுநீர் வெளியாகும். இது சிறுநீரகத்தில் ஏற்பட்டுள்ள தொற்று அல்லது சிறுநீரக கற்கள் இருப்பதைக் குறிக்கலாம்.
சிறுநீர் வெளியேறும் போது, துர்நாற்றம் ஏற்பட்டால், சிறுநீரகங்களில் ஏதோ பாதிப்பு இருக்கிறது என்பதன் அறிகுறியாகும். இது தொற்றாகவும் இருக்கலாம் அல்லது கிட்னி பழுதாகி வருகிறது என்பதைக் குறிப்பதாகவும் இருக்கலாம். இந்த துர்நாற்றம் ஒவ்வொரு நபருக்கும் மாறுபடும். இதனால் தான் உடலில் திடீரென்று ஏற்படும் மாற்றத்தைத் தெரிந்து கொண்டு தேவைப்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.
சிறுநீரகங்கள் பலவீனமாக இருக்கும் பொழுது அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு ஏற்படும். சிறுநீரகத்தால் நீண்ட நேரம் சிறுநீரை சேகரித்து வைக்க முடியாது என்ற காரணத்தால் உடனடியாக வெளியேற்றுவதற்கு உந்துதல் ஏற்படும். கிட்னி பெயிலியர் ஆகும் அறிகுறிகளில் ஒன்று தான் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு. அது மட்டுமில்லாமல் உங்கள் சிறுநீரகங்கள் ரத்தத்தை சரியாக ஃபில்டர் செய்ய முடியவில்லை. இதனால் உடலில் அதிகப்படியான நச்சுக்கள் சேகரிக்கப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.